வம்பை விலைக்கு வாங்காதே
பத்மினி அர்ஹந்த்
இந்த அகராதி அகம்பாவத்தின் பின் இருக்கும் அனைவரும், அவரவர் அழிவும் அகோர முடிவும் நிச்சயம் என்பதை தெரிவிப்பது தான் உறுதி.
உள் நாட்டு பிரச்சனைக்கு கவனத்தை ஈர்க்க கீழ் தரமாக செயல் படுவது, தன் குழியை தானே தோண்டுவதாகும். இது இந்த வீண் விவகாரத்தில் பங்கிடும் அனைவருக்கும் சாரும்.
இந்த சீண்டுதலில் செயல் படும் யாவருக்கும், தற்சமய சரிந்து கொண்டிருக்கும் நிலைமை விரைவில் மாண்டு போவதற்கான அறிகுறியாகும்.
தர்மம் (மதம்), தேசம், நீதி ஆகியவைகளை பேரம் பேசி மற்றபடி பிறருக்கு கெடுதல் செயவதே தன் வாழ்க்கையாக வாழ்பவர்களுக்கு விமோச்சனம் என்பது இவர்கள் கனவில் கூட இயலாத உண்மை.
இவை மூன்றையும் விலை பேசும் தருணம் அதோடு அடுத்து கெடுத்து வாழும் செயல்பாடு அவரவர் முடிவையும் அதையொற்றி நிகழவிருக்கும் அவர்களின் ஆன்மாவின் நிம்மதியற்ற சீரழிவை துல்லியமாக பிரதிபலிப்பதாகும்.
முக்கியமாக எந்த தர்மம் / மதத்தையோ இழிவு செய்தல் அதை பகடையாடும் சூதாடிகள் தன் சதியில் மதி இழந்து துர்கதியை விதியாக அடைவது தான் மிச்சம்.
நீ உன் தர்மத்தை மதித்தால், பிற மதங்களை அவமதிப்பதில்லை.
நீ உன்னை மதித்தால், பிறரிடம் அவ்வாறே செயல் படும் அறம் இயல்பாகும்.
ஏனென்றால், சுய மரியாதை குடும்பம், குலம், இனம், சமுதாயம், மனித மரியாதையின் அடிப்படை அஸ்திவாரம். அதுவே சீரற்றவை ஆகினும், எத்தகைய பதவி, புகழ், பொருளாதாரம் அதற்க்கு ஈடாகாது.
தன் வினை தன்னை சுடும்.
வினை விதைப்பவர் வினை அறுப்பர்.
நெருப்பில் விளையாடுவது சாம்பலாகத்தான் முடியும்.
பத்மினி அர்ஹந்த்








mania as that is not going to deliver what is aimed at and desired in vain except confirming your asinine indulgence.




Leave a Reply
Your email is safe with us.