மகாபாரதம் – கலியுகத்தின் கண்ணாடி
பத்மினி அர்ஹந்த்
மகாபாரதம் – கலியுகத்தின் கண்ணாடி.
தற்சமய அரசியல் விவகாரங்கள் ஜன நாயகமென்ற பெயரில் அத்து மீறி செயல்படும் கொள்ளை, கொலை, பாலியல், தேச துரோகம், ஊழல், லஞ்சம், குடியைக் கெடுக்கும் குடி பழக்கத்தை அரசியல் திரையுலகம் விளம்பரப் படுத்தி டாஸ்மாக் (TASMAC – Tamil Nadu State Marketing Corporation) என்ற மாநில அரசு நிர்வாகம் சமுதாயத்தை குடி போதையில் மூழ்க வைத்து, அதில் வரும் வருமானத்தையும் தனது சொத்தாக மாற்றி அயல் நாட்டின் Swiss, சிங்கபூர் வங்கிகளிடம் ஒழித்து வைத்து பல வகையில் சூரையாடுவது, மகாபாரத காவியத்தில் சதுரங்கத்தில் எல்லாவற்றையும் இழக்கும் சம்பவத்துடன் ஒப்பிட தக்கவையாகும்.
கலியுகத்தில் நடைபெரும் இவ்வாறு நடத்தைகளையொற்றி தான் மகாபாரதம் உருவாகியது. மனித குலம் எவ்வாறு நிலயற்று எதிர் மறையான வழியில் உற்சாகத்துடன் செயல் படுவார்களென்று தெளிவாக சித்தரிக்கப் பட்ட காவியமாகும்.
மற்ற அரசியல் செயல்பாடுகளில், ஜாதி இனம் மதம் போன்ற வேறுபாட்டை விதைத்து கலவரம் செய்தல். பிறகு அதை தேர்தல் சமயம் அறுவடை செய்வது.
இதற்கும் மீறி தனது பதவியை தக்க வைப்பதற்காக, இரண்டாம் முறை தேர்தலில் 2019ல் வெற்றி பெறுவதற்காக தேசத்தின் எல்லையை பாதுகாக்கும் மத்திய அரசின் கீழீருக்கும் காவல் படையினரயே (CRPF) புல்வாமா காஷ்மிர் பகுதியில் காவு கொடுத்து அதைப்பற்றி மக்கள் காதில் படாமல் இருக்கும்படி அச்சமய மத்திய அரசால் நியமிக்கப்பட்ட சத்திய பால் மலிக் ஆளுநரிடம் எவரிடமும் பேசக் கூடாது என்ற கட்டளை விதித்தது பச்சை தேச துரோகம் என்பதைப் பற்றியும் கொஞ்சம் கூட தயக்கமோ கவலையுமில்லை.
பார்க்க போனால் மகாபாரதத்தில் கௌரவர்கள் பாண்டவர் ஆட்சி தடையில் எத்தனயோ வியூகத்தை கடைப் பிடித்தனர்.
ஆனால் ஒரு போதும் தன்னையும் தனது நாட்டை பாதுகாக்கும் காவல் படையோ அல்லது போர் வீரர்களை பலியாக்கவில்லை. போர்க்களத்தில் இறங்கிய பிறகு நடந்த மரணங்கள் எதிர் பார்த்தனவே. இதை குறித்து போர் வழியை நிராகரித்து சமாதான கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும்படி ஶ்ரீ கிருஷ்ணர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கௌரவ தலமை மறுத்து மதி கெட்டு மாண்டனர்.
ஆனால் தற்போது உள்ள தன் ஆட்சி பித்தத்தினால் தேசத்தின் பாதுகாப்பு துறையை அது காவல் அல்லது ராணுவம் ஆகியும், எதையும் பொருட் படுத்தாமல் தன்னலத்திற்க்காக யாரையும் உபயோகிப்பது பலி கொடுப்பது மேல் அதிகாரத்தின் சலுகை போல் ஆகி விட்டது.
அதனால் தான் இந்த கலியுகம் எந்த அளவிற்கு தரை மட்டத்திற்கு போகும் என்பதை மகாபாரதம் ஒரு பின் இணைந்த ஊர்தியாக அதாவது டிரெய்லராக (trailer) வழங்க பட்டது.
பொருளாதார நிலவரம் சீரழிந்து சிதரியிருப்பதை மூடி மறைத்து, பின்னணி ஆட்சியாளரான தொழில் அதிபர்களுக்கு நாட்டை ஒப்படைத்து விட்டு, தான் சிம்மாசனத்தில் நிரந்தரமாக அமர வேண்டுமென்ற பேராசையோடு, ஏழை எளிய பாமர மக்களும் சரி, நடுத்தர பொருளாதார வர்கமும் கடுமையாக உழைத்து நாட்டிற்க்கு சேர்க்கும் சேமிப்புகளை சூதாடி சூரையாடும் நபர்களுக்கு மத்திய அரசு தக்க பாதுகாப்புடன் அவர்களை இந்தியாவிலிருந்து வெளி நாட்டிருக்கு தப்பி ஒட ஏற்பாடு செய்தல்.
இப்படி கணக்கில் அடங்காத வகையில் அரசியல் மேல் குற்றச் சாட்டு யாவற்றையும் மறுக்கவோ அல்லது புறக்கணிக்க இயலாது.
அது மத்திய அரசில் தொழில் அதிபருக்கு அடிமையாக சேவை செய்பவராகவோ அல்லது மாநிலத்தில் வாரிசு அரசியலை நீடித்து கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உதறிய திராவிடமென்ற சூழ்ச்சியை தமிழ் நாடு என்ற ஏமாந்த சோணகிரி தலையில் சுமத்தி இந்நாள் வரை பகடம் விலையாடுவது, இவையெல்லம் மகாபாரதத்தில் கூட காணாத கொடுமையாகும்.
அரசியல், ஊடகம், திரையுலகம் என்று பற்றாமல், குறிப்பிட்ட ஒரு சில பேர் ஜோதிடர் என்ற சாக்கில் அரசியலின் அராஜகத்தை ஆதரித்து, அரசியலின் தூதர்களாக சமூக வலையத்தில் காண்பது ஆச்சரியத் தக்கதில்லை.
கலியுகத்தின் அநீதி, அட்டகாசம், பூமியே தாங்க முடியாத பாவங்களை செய்து அரசு, அரசியல், அரசாங்கம் தனக்கு நிகர் எவருமில்லை. அரசியல் அரசாங்கம் எத்தனை கொடிய ஊழல் ஆட்சி செய்தாலும் அதை பொற்காலமாகக் கறுதி அரசியலையும் ஆட்சியில் அமர்ந்து இருப்பவர்களையும் சாஷ்டாங்கமாக வணங்கி அவர்களின் பாத பூஜை செய்ய வேண்டுமென்ற உத்தரவு. அதற்க்கு கூலி பட்டாளத்தின் ஆதரவும் உண்டு.
இதில் வேடிக்கை என்னவென்றால், அல்ப ஆயுள் மனிதன் அரசாங்க மேல் அதிகாரி என்ற ஆனவத்தில் தான் செய்யும் கள்ளம், கபடம், கல்மிஷம் ஆகியவை கையும் களவுமாக பிடிபட்டு அகப்படும் பொழுது, தான் செய்கின்ற குற்றங்களை ஒத்துக்கொண்டு, அதன் படி தண்டனை அனுபவிப்பதை தவிர்த்து, வலை வீசி மற்றவர்களை கைது செய்து encounter, UAPA என்று பல வகை சட்டங்களை அரசியலே நியமித்து அவர்களை ஆயுள் தண்டனையில் தள்ளுவது.
இல்லாவிட்டால், மக்கள் வரியால் நடத்தும் காவல் துறையை தன் ஆதிக்கத்தில் வைத்து கொண்டு, இரவில் ஊடகம் நாடகம் அரங்கத்தில் நடு சாலையில் படு கொலை செய்வதும், அதை சர்ச்சை செய்து மகிழ்வதும் ஜன நாயக பெருமையாக அரசின் சார்பில் அமைந்துள்ளது.
அதோடு நிறுத்தாமல், நாத்திகத்தை முத்திப் போக வைத்து உண்மையான பரம் பொருள் மூவுலகத்தையும் கட்டிக் காக்கும் ப்ரமா, விஷ்னு, மகேசன் ஆக விளங்கும் அந்த ஆதி பகவன் சிவனயே ஏசவும் தூற்றவும் குற்றச் சாட்டு என்ற ஒரு கையாலாகாத உதவாக்கரை இலக்கியப் பேட்டியென்ற நீதி மன்றத்தில் ஶ்ரீ கிருஷ்ணனை உதாசினம் செய்து குற்றவாளியாக பழி சுமத்தி கேலி பரிகாசம் செய்யும் அகராதித் தனம் விரைவில் அழியப் போகும் இந்த கலியுகத்தின் அரசியலின் கெட்ட சகுனாமாகும்.
இதையும் அந்த கிருஷ்ண பரமாத்மன் அறிந்து கொண்டு, அதே மகாபாரதத்தில் இத்தகைய சம்பவம் கலியுகத்தில் நடக்கும் என்பதை மாநிடம் மத்தியில் உன்னதமாக காண்பித்து சொன்ன விஷயம் இதுவாகும்.
உன்னுடைய தவறுகளை நீ உணர்ந்து அதன்படி உன்னுடைய பாவ பாரத்தைக் குறை. அதில் தான் உன் ஆன்மாவிருக்கு விடுதி என்று உறுதியாக பகவத் கீதையில் உரைந்திருக்கிரார்.
தன்னுடைய உறவினரான சிசுபால் எந்த ஶ்ரீ கிருஷ்ணரின் கருணையினால் சிசுபாலின் ஊனம் குணம் அடைந்ததோ, அதே கருணை தெய்வமாகிய ஶ்ரீ கிருஷ்ணனை நிறைந்த சபையில் தற்காலிக பட்டி இலக்கிய பேட்டி மன்றமென்ற நீதிமன்றம் போல் இருக்கும் அமைப்பில், சிசுபால் ஶ்ரீ கிருஷ்ணரை அவதூறாக தூற்றி தன் ஆத்திரத்தை குமுறிய பின் சிசுபாலின் கதி என்னவானது என்று அந்த சபையில் இருந்தவர்களுக்கும், அதற்க்கு பின்னால் வந்த மனித குலத்திர்க்கும் அதாவது இன்றைய சமுதாயம் வரை நன்றாகவே தெரியும். ஶ்ரீ கிருஷ்ணர் சிசுபாலை விழ்த்தியது சிசுபாலை அல்ல.
சிசுபாலின் அகம்பாவம், செருக்கு ஆதாரமில்லாத பழி பட்டியலைத்தான் ஶ்ரீ கிருஷ்ண பகவான் தனது சுதர்சன சக்கரத்தால் அகற்றினார்.
பல யுகங்களுக்கு முன் கூட்டியே மனிதர்களுக்கு எச்சரிக்கையாக கலியுக நிகழ்ச்சிகளை மகாபாரதம் என்று நிகழ்ந்த காவியத்தைச் சுற்றிக் காட்டி அது ஶ்ரீ கிருஷ்ணரின் குறைகள் குற்றமாக நாத்திக திராவிடமும் சனாதன தர்மமென்ற போலி சங்கி உறுப்பினரும் செயல் படுவது தனது பாவச் சுமைகளை தட்டிக் கழிப்பதாகும்.
அதில் திராவிடம் மகாபாரதத்தின் கர்ணன் அரசனுக்கு பரிந்து பேசுவது நகைச்சுவையாகத் தான் தென்படுகிறது.
எங்க கர்ணன் – மிக பெரிய கொடை வள்ளல். அதற்க்கு எதிர் மாறான அரசியல். அரசு மக்கள் பணத்தை திருடி தனது செல்வாக்காக மாற்றி பத்து தலைமுறைக்கும் மேல் நீடிக்கும் கொடூரத்தை மறைத்து, கர்ணனுக்கு பரிஞ்சு பேசுவது கர்ணனின் அந்தஸ்துக்கே இவர்களின் கபடங்கள் ஒரு வகையில் கருப்பு தடம் திருஷ்டியாகும்.
அதே சமயம் கர்ணனனும் சில மன்னிக்க தகாத தவறுகளை செய்தது, கர்ணனின் கருணை உள்ளத்திருக்கே கலங்கமாகியது.
முக்கியமாக கர்ணனின் இளைய தமையன் அர்ஜுனனின் மைந்தன் அபிமன்யு போர் களத்தில் ஒரு இளம் வயது இளைஞனாக தனியாக பல பேரிடமிருந்து பல வித தாக்குதலை சமாளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அந்த சிறுவனின் உயிரை காப்பாற்றுவதருக்குப் பதில், கர்ணனின் கருணை துர்யோதனுக்கு கொடுத்த வாக்கு முன்னாள் தோற்று விட்டது.
கருணை என்பது பொருள்களை தான தர்மம் செய்வதோடு அடங்கியது அல்ல. ஏன் தனது உடலுடன் வந்த கவசத்தையும் தானம் செய்தது தனது உயிரையே கொடுத்ததாக ஆயினும், அபிமன்யு அந்த சக்கர வியூகத்தில் அகப்பற்று தவிக்கும் பொழுது கர்ணனின் கருணை உறங்கி அதற்க்கு மாறாக அந்த சிறுவனின் மீது அம்பாக பாய்ந்ததை கர்ணனனும் கௌரவர்களும் பார்த்து ரசித்தனர்.
இதே மாதிரி நிறைந்த சபையில் த்ரௌபதியின் மான பங்கம் ஆகும் பொழுதும் கர்ணனின் கருணையை கர்ணனின் சினம் பழிவாங்கும் நோக்கம் எளிதாக வென்றது.
த்ரௌபதி சுயம்வரத்தின் சமயம் தனது அறியாமை மற்றும் அரச குமாரி என்ற அபிமானத்தால் ஒரு சிறந்த வல்லமையான வீரன் கர்ணனை சூத்திர புத்திரன் என்று உதாசினம் செய்தது, த்ரௌபதியின் தவறுதான்.
ஆனால் அதை ஞாபகம் வைத்துக் கொண்டு, கர்ணன் த்ரௌபதியின் துயில் உருவும் அநீதியை கண்டனம் தெரிவிக்காமல், தானும் அதில் பங்கேற்று ஒரு பெண்ணின் சாபத்திறுக்கு பலியானது கர்ணன் போன்ற ஒரு கருணையின் சிகாமனி என்று புகழ் பெற்ற மன்னனுக்கு எந்த வகையிலும் சிறந்தது அல்ல.
இந்த இரண்டு சம்பங்களே மகாபாரதத்தில் கர்ணனின் மகத்தான வலிமையை பலவீனமாக்கியது. அதனால் தான் கர்ணனக்கும் அபிமன்யுவை போல் தர்ம சங்கட நிலையில் தனது உயிர் இழக்க வேண்டியதாகியது. இதும் கர்மா காலம் வகுக்கும் நீதியாகும். இதில் ஶ்ரீ கிருஷ்ண பரம் தாமனை குற்றவாளி என்பது கடவுள் என்னும் அருள் மேலிருக்கும் திராவிட நாத்திகத்தின் பகை மற்றும் வெறுப்பாகும்.
இவ்வளவு தத்துவம் இலக்கியம் பேசும் திராவிடம், கலியுகத்தில் நடக்கவிருக்கும் தீமைக்கான சரியான பதிலை முள்ளை முள்ளாள் நீக்குவது போல் மகாபாரதத்தில் ஶ்ரீ கிருஷ்ணரின் செயல்பாட்டை குற்றமாக நிந்தித்து கேலி நையாண்டி செய்யும் மனிதனின் குரங்கு புத்தி பிரதிபலிக்கின்றன.
ஆக மொத்தம் சர்வாதிகாரம் தலை கனத்தில் ஆடும் பொழுது மேல் கண்ட அநியாயம் அட்டூழியங்கள் ஆகியவை அரசியலின் உரிமையாக போய் விட்டது.
இப்படியொரு வரலாறு தற்போது இருக்கும் தருணத்தில், கலியுகத்தில் இப்பொழுது நடக்கும் அரசியலின் அயோக்கியம் ஶ்ரீ கிருஷ்ண பரமாத்மனை மகாபாரதத்தைக் குறிப்பிட்டு குற்றச் சாட்டுகள் சுமத்துவது தன்னுடைய மன்னிக்கத் தகாத தீயவைகளை நியாயப்படுத்தும் தோல்வியாகும்.
கலியுகத்தில் தனது அகம்பாவத்தையும் முட்டாள் முரட்டுதனத்தை வெளிபடுத்துவது ஆகியவை போன்ற அரசியல் சூட்சமத்தைத் தான் புண்ணிய திருமறைநூல் வேதமாக ஶ்ரீமத் பகவதம் மற்றும் மகாபாரதம் காவியம் தீர்க தரிசியாக விவரித்தன.
இதையெல்லாம் யூகித்துதான் மகாபாரதம் கலியுகத்தின் கண்ணாடியாக திகழ்வது தற்கால அரசியல் நிரூபிக்கிறது.
தீங்கு, தீயவை, கொடுமை, துரோகம், பொறாமை, பிறருக்கு கெடுதல் செய்தல், பிறர் உரிமையை தனதாக்குதல், பிறர் வாழ்க்கையோடு முரண்பாடான வதந்தியை பரப்புதல், இவ்வாறான அகம்பாவம், கர்வம், முட்டாள் தனம் போன்ற அறமற்ற செயல்பாடுகள் முடிவு அழிவு நிச்சையம்.
இதை நீடிக்கும் பிரயாசை முறிந்து போவது அவசியாமாக இருப்பினும், இத்தகைய ஈடுபாடு அரசியல் அரசாங்கம் அரசியல் அதிகாரத்திருக்கும் அவர்களின் கூட்டணியில் பதவி, பொருள், புகழ் என்ற மோகத்தில் பிறருக்கு தான் கேடு செய்வது தவறு என்று தெரிந்த பின்னும் அதில் செயல்படுவது – இவை எல்லாவற்றுக்கும் இதில் செயல் படும் எல்லோருக்கும் அது யாராயினும் – யாவருக்கும் முற்றுப் புள்ளியாவது திட்டவட்டமான நிகழ்வாகும்.
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
5 Comments
Leave your reply.