நெற்றிக் கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே – நக்கீரன்
பத்மினி அர்ஹந்த்
வணக்கம்.
இது மற்றும் ஏன் அதிகாரத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் பொது மக்கள் வரியில் மஞ்சல் குளிக்கும் அரசியல் வாதிகளும், சாதாரண மக்கள் பணத்தில் அமோக செல்வாக்கை பெறும் திரையுலகம் மற்றும் தொழிலதிபர்கள், செய்தி ஊடகங்கள் இத்யாதிக்கு சாத்தியமில்லை?
இவர்கள் தான் பின் செய்த தற்சமயம் செய்கின்ற குற்றங்களை குற்றமாகவே கருதுவதில்லை. அதற்க்கு பதில் தகாத சாக்குகளை சொல்லி கடவுளை குற்றவாளியாக கூண்டில் நிக்க வைத்து இவர்களின் அடியார்கள் மூலம் ராமபிரான், கிருஷ்ண பரமாத்மன், பரம சிவன் ஆகியோர்களை குறை சொல்வது இவர்களின் பிறவி குணமாகியுள்ளது.
இது மட்டுமல்ல, திருவள்ளுவரை சாட்சி கூண்டில் அடைத்து அவர் அருளிய அறம் பொருளான திருக்குறள் அவரையே கேள்வி கேட்க்கும் படி தர்ம சங்கடமான நிலமையை தனுக்கு உருவாக்கி கொள்வது இவர்களுக்கு சகஜமில்லை.
தன்னுடைய கணக்கில்லாத ரகசியங்கள், அபராதங்கள் மற்றும் சட்ட விரோதமான செயல்களை மூடி மறைத்து அதை பொது மக்களின் கடினமான உழைப்பின் பணத்தில் பத்திரமாக பாதுகாத்து வரும் கூட்டணிக்கு வேறென்ன தோன்றும்?
அதனால் இவர்கள் இந்த பூமியில் நடத்தும் திருவிளையாடல் இவர்களைத்தான் கேள்வி குறியாக்கி, இப்படியும் ஒரு விசித்திரம் இந்த கலியுகத்தில் தான் காண முடியுமென்றும் விளங்குகிறது.
பிறரின் வீட்டில் புகுந்து, அவர்களுக்குத் தெரியாமல், அவர்களின் அனுமதி பெறாமல் மறைமுகமாக நோட்டம் செய்வதை நெறிமுறையற்றது. அதோடு அந்த வீட்டின் நபர்களின் தனி உரிமையை அலட்சிய படுத்துவதை ஒத்துக்காமல், இவையெல்லாம் ஒரு நாகரிக சமூகம் செய்யும் செயலல்ல என்பதை உணர்வதற்குப் பதில், அதற்க்கு இவர்கள் விடை என்னவென்றால் ராமாயணத்தில் வரும் வாலியை ராமன் பின்புறமிருந்து தாக்கியதாகவும், இதை சதி என்று கூறி இவர்கள் தான் செய்யும் முரண்பாடுகளை இச் சம்பவத்தின் மூலம் சலவை (Dry Clean) செய்கிறார்கள். இதில் சிறிதும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், இவர்கள் தர்க்கம் பகவானை சுற்றிக் காட்டி, தான் செய்வது தவறில்லை என்ற அபிப்பிராயம்.
ஆனால், இவர்களின் வாதம் திருப்பதியில் அரைகுறையாக முடி வெட்டும் பாணி கேலிக்கு காரணமாவது போல், இவர்கள் ராமாயணத்தின் இச் சம்பவத்தை முழுதாக அறியாமலோ அல்லது வேண்டுமென்றே நிராகரிப்பதோ, எதுவானாலும் எதையும் முழுமையாக கூறாமல் தனக்கு சாதகமான பாகத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு மீதியை தவிர்ப்பது எதிர் மாறான பேர்வழிகளின் சிம்ம சொப்பனமாகும்.
ராமபிரான் வாலி சம்பவத்தில் – வாலி சம்பவம் விதி மற்றும் மதிகெட்ட செயலினால் உருவான நிலை. அதில் ஸ்ரீ ராமன் சூழ்நிலை வாலி அவ்விதம் தான் மறையும் விதி. ஆகவே தன் இச்சையின்றி ஸ்ரீ ராமன் செயல் பட வேண்டிய நிலமையாகியது. அவ்வாறு இருப்பினும் வாலியிடம் ஸ்ரீ ராமன் கொடுத்த வாக்கு – த்வாபரை யுகத்தில் கிருஷ்ண பரமாத்மனாக அவதரிக்கும் பட்சத்தில், வாலி வேடனாக வந்து தன்னை மரத்தின் பின்னால் நின்று அம்பு எய்து, அதனால் தன் தேகம் தியாகிகப் படும் என்பதை உறுதி அழித்தார். அதன் படியே த்வாபரை யுகத்தில் கிருஷ்ண பரமாத்மாவின் பஞ்சபூத சரீரம் தியாகமாகியது. இதுதான் கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்.
அதேபோல் இவர்கள் தான் ஒட்டுக் கேட்பதை எப்படி சமாளிக்கிறார்களென்றால், இவர்கள் படி திருவள்ளுவர் திருக்குறளில் ஒட்டுக் கேட்பது தவறில்லை என்று கூறியதாகவும் அதன்படி தனது வினோதமான கொள்கையை மாற்ற இயலாது என்பது இவர்களின் பிடிவாதம். திருவள்ளுவரின் எந்த குறளில் இத்தகைய அறம் உத்தமமென்று சொல்லப் பட்டது என்பதை இவர்கள் தெரிவிக்க விரும்பவில்லை.
பிரமாண்டத்தை படைத்த அந்த இறைவனை குற்றம் குற்றமே என்று அழுத்துபவர்கள், தான் செய்யும் மன்னிக்க முடியாத பாவங்கள், நாடு, மக்கள், சுற்றம், இயற்க்கை போன்றவைகளுக்கு பல்வேறு விதத்தில் செய்யும் துரோகம், துன்பம், அழிவு, சேதம்…எதையும் தவறாக கருதி வருத்தும் சீர் திருத்தம் என்பது இவர்களுக்கு ஏழாம் பொருத்தம்.
எப்படி ஆற்றின் மணலை கையில் வைத்தல், எவ்வளவு இறுகி பிடித்தாலும் நழுவி அந்த மணல் மீண்டும் மண்ணில் சேர்வது போல், இவர்கள் விவகாரம் தன்னை சீர்திருத்துவது அல்ல. அதற்க்கு மாறாக சீர்குழைந்த பண்பாட்டை நீடிக்க வழி தேடுவது மேன்மையாகிறது.
இதில் வேடிக்கை என்னவென்றால், பிரபஞ்சம் உருவாக்கம் அறிவியலா அல்லது ஆண்டவன் செயலா என்ற விவாதம் நீடித்தாலும், இரு தரபும் தவிர்க்க இயலாதது அவரவர் கர்ம வினைகள். இதையும் தற்காலம் ஏமாந்த சோணகிரி மேல் சுமத்தி, அவளின் நல்ல கர்ம பலன்களை தனதாக்குவது நவீன ரீதியாகியுள்ளது.
ஆக மொத்தத்தில் இவர்களின் தீர்ப்பு – இவர்கள் அபராதி ஆயினும் தன்னை நிரந்தர நிரபராதி என்ற பட்டத்தை சூற்றி வெற்றி விழா கொண்டாடுவது இக்கால கட்டத்தின் ஐதீகம்.
எனினும் – இறைவன் ஒருவன் இருக்கிறான். அவன் படைத்த இயற்கையின் நீதியில் கர்ம தர்மத்தின் படி எது குற்றமோ அது குற்றமே. அதன்படி கர்ம பலன்களை அனுபவித்தே ஆக வேண்டுமென்பதே நிலை காலம் தவறாத நீதி.
நன்றி.
வணக்கம்.
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.