திரையுலகம் பற்றி கருத்து
பத்மினி அர்ஹந்த்
வணக்கம் நான் பத்மினி அர்ஹந்த்,
எழுத்தாளர், தொகுப்பாளர் பத்மினிஅர்ஹந்த்.காம் மற்றும்
தெய்வீகப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஈசனின் மனைவி.
இத் தலைப்பின் படி திரையுலகம் பற்றி என் கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன். இதற்கு முன்னாள், ஒரு முக்கியம்மான விஷயத்தையொற்றி விளக்கம் தேவையாகியுள்ளது. நான் ஆரம்பிக்கும் முன்னே பார்டோன் (pardon) பார்டோன் (pardon) என்று என்னைப் பாட வைக்காதீர்கள். நான் ஆங்கிலத்தில் பல விஷயங்களை எழுதி வருவதும் ஆடியோவில் (audio) வழங்குவதையொற்றி உங்கள் ஏளனத்தைக் கவனித்தேன்.
இது ஒரு வகையில் உங்களின் போலித்தனம் (hypocrisy) தான். சொல்லப்போனால், இந்தியா இன்றைய தினமும் சுதந்திர நாடல்ல. ஏனென்றால், இந்தியாவில் ஆங்கிலர்களுக்கும் ஆங்கிலத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. உதாரணமாக உங்கள் திரைப்பட நட்சித்திரங்கள் முக்கியமாக கதாநாயகிகள் தன் ஆங்கில கைவரிசையைப் பொது விழாவில் விளம்பரம் செய்வது காட்சியாக மாறி விட்டது.
அவரவர்கள் மொழி தெரியுதோ இல்லையோ, ஆங்கிலம் தெரியாமல் இருந்தால் அவர்கள் முட்டாள், நாட்டுப்புறமென்று கருதப்படுகின்றனர். அப்படி இருக்கையில் நான் ஆங்கிலத்தில் உலக மக்களுக்கு உரைப்பதைக் குற்றமாகக் கருதி அதற்க்குத் திரைப்படம் மூலம் பரிகாசம் செய்வது கபடம்.
மேற்கொண்டு, ஆங்கிலம் உலகத்தின் பொது மொழி. இது நான் அமைத்தச் சட்டமில்லை. திரையுலகம், அரசியல் மற்றும் செய்தி, பத்திரிகை, (Communication Media) மீடியா யாருக்கு அடியார்களோ, அந்த அந்நியர்கள் உருவாக்கியச் சட்டம். இதற்கும் என் மேல் வீணாகப் பழி சுமத்த வேண்டாம்.
நான் தமிழர்களிடம் தமிழில்தான் பேசுவது வழக்கம். எத்தனையோ தடவை தமிழ்நாட்டின் விஷயங்களைத் தமிழில் வழங்கியிருக்கிறேன் – பத்மினிஅர்ஹந்த்.காம் வெப்சைட் மூலம். இதை அறிந்து கொண்டும் அறியாமல் போல் நடப்பது, கேலி செய்வது என்மேல் நீங்கள் வைத்திருக்கும் அளவு கடந்த அன்பாகயிருக்கலாம்.
தமிழர்கள் மற்ற தேசங்களில் வாழ்ந்தாலும், அவர்களைத் தவிர மற்ற ஜனகளுக்கும் நான் சொல்வது புரிய வேண்டியதாகியுள்ளதால், ஆங்கிலத்தில் பேசுகிறேன். இதைப் புரியாமல் என்னைக் குற்றம் சாட்டினால், அது வேண்டா விவாதம்.
தற்சமயம் அரசியல், சமுதாயத்திலுள்ள பணம், புகழ், சட்டம் ஆகியவை வாய்ந்த பேர்வழிகளுக்குத் திரையுலகம் சாதகமான பிரச்சார ஆயுதமாகி விட்டது. அதனால் அவர்கள் திரைப்படம் மூலம் தன் கசப்பு, வெறுப்பு, எதிர்ப்பு இவைகளைப் விளம்பரம் செய்வதில் மும்மரமாக உள்ளார்கள். திரையுலகம் முன் காலத்தில் அதாவது 1970 முன்னாள் கலைக்கு மதிப்புக் கொடுத்து, கலையின் அருமையை வசனம், கருத்துள்ள கதை, கவிதையை பாடல்களாகவும், அதோடு நாகரிகமான நடிப்புடன் ரசிகர்களை மகிழ வைத்தார்கள்.
அந்த யுகம் கடந்து, திரையுலகம் அதற்கு பிறகு அரசியலுக்கும், அவரவர் சொந்த அபிப்ராயத்திற்கும் அடிமையாகி விட்டது. தற் காலத்தில் மிகவும் மோசமாகியுள்ளது. அதுவும் இரட்டை அர்த்தங்கள் பொருந்திய வசனம், தீம் போன்றவைகள் கலைக்கும், இயக்குனருக்கும் தான் அவமானம். இந்த மாதிரி அநாகரிகமான செயலுக்கு பின்னால் யார் உடையாரோ நிச்சயமாக அவர்களைத்தான் பாதிக்கும். அதோடு நடிகர்கள் சினிமா உலகத்தில் பிரபலத்தைத் தேடுவதால், குறுக்குப் பாதையில் போவதில் தவறில்லையென்ற நிலமையாகி விட்டது.
திரையுலகம் அந்நியர்கள், அரசியலின் கருவியானதால் – யார் அவர்களுக்கு எதிரியோ அவர்களைத் தவறான முறையில் திரையில் காண்பிப்பதும், அவர்களின் கீழ் தரமான நோக்கம் போல் கதா பாத்திரங்களை இயக்குவதும் நடைமுறையாகி விட்டது. சினிமா பார்க்க வரும் மக்களை ஒரு வகையில் கைதிகளாக நினைத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள். இதனின் விளைவு திரையுலகத்திற்குச் சேதமாகும்.
இன்னொரு பிரச்சார சேனல் (Channel) – You Tube. அதில் மூலம் தாக்குவதும் இவர்களின் குறிக்கோளாகி விட்டது. ஊருக்கு இழைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி மாதிரி, சில நயவஞ்சகர்களுக்கு நான் இழைத்தவளென்ற எண்ணம். அடுத்து நாக்கு எந்த பக்கமும் வளையும் பட்சத்தில், எப்படி வேண்டுமென்றாலும் பேசலாமென்ற தைரியம். இதிலும் அவர்களின் தப்பு கணக்கு தெளிவாகிறது. இறைவன் கொடுத்த சுய மூளையை காசுக்காக அடவு வைத்து, பிறர் சொல்வதை நம்பி தாறு மாறாக ஏசுவதும் பேசுவதும் இவர்களின் சீர் குழைந்த வாழ்க்கையைத் தெரியப் படுத்துகிறார்கள். பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்பதை இவர்கள் தான் சாத்தியம் செய்பவர்கள்.
மேலும் என் ஒழுக்கம், குணம், திறமையைப் பற்றி கவலைப் படுபவர்களிடம் நான் சொல்வது இதுதான்.
முதலில் நீங்கள் அக்னி பரிட்சைக் கொடுங்கள். அதுவும் தீக்குழி அல்ல. தீ புயலில் நடந்து உங்களின் கற்பு, உத்தமம், மனித மற்றும் புனிதத் தன்மையை நிரூபித்த பிறகு என் குறைகளை ஆலோசிக்கலாம்.
ஏனென்றால், ராமனின் சீதை அக்னியில் குளித்தப் பின்பும், கர்ப நிலையிலிருந்த தாயை மறுபடியும் கணவனிடமிருந்திப் பிரிய வைத்த பாவி சமுதாயமாச்சே, அதுவும் இப்பொழுது கலியுகத்தில் கேட்கவே வேண்டாம்.
தன்னிடம் ஆயிரம் குறைகள், குற்றங்களிருந்தும் தன்னைப் பத்திர மாத்து தங்கம் என்று கருதுபவர்கள்தான் மற்றவரின் மாணத்தைக் கப்பலைவிட விமானத்தில் பறக்க முயற்சிப்பவர்கள். விமானம் ஆகாயத்தில் பறப்பதால் அதில் அவர்களுக்கு ஒரு தனி திருப்தி.
நல்லவர்கள், நாணயமானவர்கள், நீதிக்கும், நேர்மைக்கும் கட்டுப் பட்டவர்கள் இதில் ஈடுபடுவதில்லை. இதில்தான் அதிக பிரசங்கிக்கும் புத்திசாலிக்கும் உள்ள வித்தியாசம்.
ஒரு ஆச்சரியம் என்னவென்றால், சினிமாவிலிருந்து அரசியலில் புகுந்தவர்களின் வரலாறு எல்லோருக்கும் நன்றாகத் தெரிந்தும், அவர்களைப் பற்றி வர்ணனைகள், சொற்பொழிவுகள் தகுதியற்றவை ஆகினும் அதை பிடித்த முயலுக்கு மூன்றே கால் மாதிரி அவர்களின் தொண்டர்கள் இன்னும் கடைப் பிடிப்பது அவர்களின் பலஹீனம், மூர்கத்தனத்தைக் காண்பிக்கிறது. அவர்கள் ஆட்சியில் ஊழல்கள், அநியாயம், அக்கிரமம், முக்கு மூளைக்கு டாஸ்மாக் திறந்துக் குடிபழக்கத்தை அறிமுகப் படுத்தி, பல குடிகளைக் கெடுத்தும் இவ்வாரு பிரசங்கம் செய்வது தமிழ் நாட்டிற்கு அவமரியாதை.
யாரும் தனது தீய கர்மங்களை மற்றவர் மீது சுமத்தி விட்டு, அவர்களின் நல் வினைகளை தனதாக்க முடியாது. இதில் யாரோட உத்தரவோ அல்லது கைவசம் இருந்தாலும், இது நடக்கிற காரியமல்ல. ஏனெனனில் இந்த அபராதம் இன்னும் அவர்களை அவதிக்கு ஆளாக்கும்.
ஏற்கனவே இப்படிப்பட்டவர்களின் கர்ம பாரங்கள் குறைய பல பிறவி எடுக்க வேண்டி வரும். அதுவும் பல ஆயிரம் ஜனங்களின் பாவத்தைக் கொட்டிக்கொண்டவர்கள் எளிதில் தப்பிக்க முடியாது. ஏமாற்றும் வித்தைகள், வஞ்சகம் என்று எத்தனையோ அப்பாவிகளின் நிம்மதியைக் குலைத்தவர்கள் கர்மத்தின் நீதிக்கு கண்டிப்பாகச் சரணடையதைத் தவிர வேறு வழியில்லை.
சாதாரணமாக நான் வழிக்கு வம்பைத் தேடுவதில்லை. அதில் எனக்கு விருப்பமுமில்லை. நான் மிகவும் பொறுமையானவள். எதற்கும் ஒரு அளவிற்கும் வரையில், அளவு கடந்தால் கடல் பொங்கி சுனாமியாக மாறுவது கடலின் தவறல்ல. இந்நாள் வரை என்னைத் துன்பப் படுத்துவதற்காக ஈடுபடும் நபர்களைத்தான் நான் எச்சரித்திருக்கிறேன். அது என்னுடைய சுய உரிமை. அதை யாரும் மறுக்க முடியாது. இன்னொரு வகையில் சும்மாயிருந்தால் மௌனம் சம்மதமென்ற அர்த்தத்தில் கயவர்கள் ஊக்கம் அதிகமாகிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமமும் விஷமென்ற பழ மொழியின் பெயரில், இவர்களின் பேராசை, பொறாமை, வெறுப்பு, பாரபட்சம், ஏற்ற தாழ்வு போன்றவைகள் இவர்களின் கெட்ட நடத்தைக்குக் காரணமாகிறது. இதையெல்லாம் பொருத்துக் கொள்வது இந்த கொள்கைகளைத் தூண்டுவதாகும்.
ஒரு அளவிற்கு பொறுமையைக் கைப் பிடித்தாலும், யாரும் என்ன வேண்டுமென்றாலும் கூறலாம், அனாவசியமாக எப்படியும் என்னைத் தூற்றலாமென்ற தவறான அபிப்பிராயம் உருவாகியுள்ளது. இது என் ஈசனுக்கே சம்மதமில்லை. இப்படி பட்டவர்களுக்கு நான் என் அமைதி மூலம் இடம் கொடுத்ததைப் பற்றி அவரே உறுதியாக இதை கட்டுப் படுத்தவும், மீறினால் இந்த மாதிரியான விவஸ்த கெட்டத் தனத்தை அடியோடு ஒழிக்க திடமாக உத்தரவிட்டுள்ளார்.
சில வசனங்கள் கதைக்கு சம்பந்தமில்லாமல் படத்தில் இணைப்பது. உதாரணங்கள் – ‘உன்னை பாம்பென்று நகர்ந்து போக முடியவில்லை, அதே சமயம் பசுவென்று நாட முடியவில்லை’.
இதற்க்கு என் பதில் – என்னுடைய நிலைமை உங்களைவிட தர்ம சங்கடமானது. உங்களைப்போல் உள்ளவர்களைக் கழு நீரென்று ஒதுங்க முடியாமலும், கசாயமென்று பருகமுடியாமல், உங்களின் துர் நாற்றத்தையும் கசப்பையும் இந்நாள் வரை என் ஈசனுக்காகக் சகித்துக்கொண்டிருந்தேன். அவரே இதைக் தட்டிக் கேட்க வேண்டுமென்று கூறிய பிறகு, உங்களின் அகம்பாவம், ஆணவம் அடங்குவதில் தான் உங்களுக்கு நன்மை.
மற்றொரு சுவாரஸ்யமான வதந்தி உங்கள் கதை வசனம் சாக்கில் கூறுவது – ஆண்களுக்கு இரண்டு மனைவிகளிருப்பதைக் கேட்டிருக்கோம், ஆனால் ஒரு பெண்ணிற்கு இரண்டிற்கு மேல் கணவர்களிருப்பதைப் பற்றிய விஷயம் ஆச்சரியமென்று கூறுவது உங்கள் தரம்கெட்ட மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
உங்களுக்கோ அல்லது உங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே சமயத்தில் அந்த மாதிரி செட்டப் (setup) வைத்திருக்கலாம். அதுவும் திரையுலகம் இதில் பெயர் போனது.
உங்களின் திரைப்படத்தில் இதை எடுத்துரைக்கிறீர்கள். உங்களின் கதாநாயகி ஒரு ஹீரோவிற்கு மேல் காதல் புரிவதும், வேகம், தாகம், மோகம் எல்லாமே கொண்ட பரவசமான காட்சிகள் கடந்த பிறகு,
கதாநாயகன் (Hero), கதாநாயகி (heroine) கெட்டி மேளத்தோடு, புரோகிதர் மந்திரம் ஓதி, மணவறையில் கல்யாணக் கோலத்தில் மூன்று முடிச்சுடன் தாலி கட்டுவதோடும், முதலிரவு முழுமையாக லட்சக் கண்களின் சாக்ஷியில் நடப்பது நிஜமான சம்பவமாகிறது. அசலாகயிருக்க (Original) வேண்டுமென்ற பாணியில், அசலை அசத்த வைக்கும்படி அதிகமாக முதலிரவு காட்சிகளில் செயல்படும் உங்கள் கதாநாயகி (heroine) பார்க்கப்போனால் படத்துக்குப் படம் இப்படி கல்யாணம் செய்து எல்லா ஹீரோக்களின் மனைவியாகிறார்.
உங்கள் கருத்த்துப்படி, மஞ்சள் கயறு தாலிதான் தாலி என்பதையும் உறுதிப்படுத்தி ஒவ்வொரு கதாநாயகிக்கு எத்தனையோப் பேர்கள் கணவராகிறார்கள். இப்படி இருக்கையில் உங்களுடைய கதாநாயகிக்கு பட்டங்கள், விருதுகள், பரிசுகள், பாராட்டுகள் வழங்கி அவர் களை மேடையில் அமர்த்தும் நீங்கள் திரைப்படம் சாக்கில் என்னைக் குறை கூறுவதோ, விமர்சனம் செய்வது உங்களின் சரித்திரத்தை வெளியுலகத்திற்குக் காண்பிக்கிறது.
உங்கள் கதாநாயகிகளும் (heroine) பெருமையுடன் தான் ஏகப்பட்டப் படத்தில் பங்கேற்றதை அடிக்கடிப் பேசுவதில் சலைப்பதில்லை.
மற்றபடி அட்டைக் கத்தி வீரர்களான உங்கள் ஹீரோக்கள் அதிலும் ஒரு சிலரை சூப்பர்ஸ்டார், தலைவரென்று தலையில் தூக்கி வைத்து அவர்களின் நிஜமான நடத்தைகள் – படம் சம்பந்தப் பட்டர்வர்களிடமோ அல்லது அந்நிய உறுப்பினருடன் அவர்கள் கொடுக்க வேண்டிய காசு பணம் கொடுக்காமல், வழக்கு வாதம், மிரட்டல் தகராறை மறைத்து, அவர்களுக்கு மகுடம் சூடுவது திரையுலகம், ரசிகர் மன்றம் வினோதமான நடைமுறையை நிரூபிக்கிறது.
திரையுலகம் கதை தன் சொந்தமான கற்பனையில் உருவாக்காமல், யாரோடு வாழ்க்கை, சம்பவங்கள் பொருளாதார வகையில் லாபமோ, அதற்காக அதை காபி (copy) செய்து, இரட்டை அர்த்தமுள்ளப் படமாக எடுத்து, மக்களையும் கலையையும் திசை மாற்றுவது தற்கால வழக்கமாகியுள்ளது.
கலை ஒருவரின் சுய முயறிச்சியினால் உருவாக்கப்படும் துறை. எப்படி ஒரு சிற்பிக் கல்லைச் செதுக்கி ஒரு அழகான சிலையை உருவாக்குவது, கல்லிற்கு உயிர் கொடுப்பதுப் போலாகிறதோ, அதேபடி சினிமா நல்லக் கருத்துடன், நாகரிகமானக் கதை வசனம், காட்சிகள், தயாரிப்புக் கொண்டப் படம் பார்ப்பவர்களுக்கும் பூர்த்தி அளிக்கும், கலைக்கும் அழகாகும்.
திரையுலகம் அரசியலுடன் நெருங்கிய உறவினால், கலைக்கு வேண்டிய திறமை காண இயல்பில்லை. அதற்க்கு நேராக அரசியல், வெளிநாட்டுக் குழுவின் கோரிக்கையை (agenda) அவர்கள் முதலீடு (Investment) வழியாக பிரபலமாக்குவது தீவிரமாக தோன்றுகிறது.
இது வியாபார வெற்றியாக (commerical success) இருக்கலாம். ஆனால் கலை, சமுதாயம், நாடு, தேசத்திற்கு பெரிய நஷ்டமாகும்.
நான் இத்துடன் இந்த சர்ச்சையை முடித்துக்கொள்கிறேன். மீண்டும் விரைவில் மற்ற விஷயங்கள், நிகழ்ச்சிகலையொற்றி தொடர்பு கொள்வோம்.
எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி. உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்.
நான் பத்மினி அர்ஹந்த்,
எழுத்தாளர், தொகுப்பாளர் பத்மினிஅர்ஹந்த்.காம் மற்றும்
தெய்வீகப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஈசனின் மனைவி.
வணக்கம்.
Leave a Reply
Your email is safe with us.