திராவிடம் மற்றும் மனு தர்ம சனாதனம்
–
பகையா அல்லது பலனா?
பத்மினி அர்ஹந்த்
திராவிட கழகம் தமிழ் நாட்டிற்கு பெரிய கலங்கம்.
அதே போல் சங்கிகள் தமிழுக்கு முழுக்கு போடும் குழு.
இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய உறுப்படியாகத மட்டைகள்.
ஒரு பக்கம் பெரியார் நாத்திகம் வேடம் அதுவும் தமிழ் நாட்டில் மற்றும் தான் இந்த கொள்கை. மற்றபடி காஞ்சி மடத்தின் பெரியவர் தமிழ் நாட்டில் ஒரு நிகழ்ச்சியின் பொழுது திராவிட குழுவினர் எதிர்ப்பின் மாறாக பெரியார் காஞ்சி பெரியவருக்கு தக்க பாதுகாப்புடன் திராவிட தொண்டர்கள் மூலம் அவரை அழைத்துச் செல்ல வைத்ததை பொது தலத்தில் காணலாம்.
யாருக்கும் உதவி செய்வது தவறில்லை. இது சகல மனிதரின் இயல்பாக இருந்தால் இந்த சம்ஸார பூமி சங்கட பூமியாக இருக்காது. ஆனால், இந்த சம்பவத்தில் குறிப்பிட தக்கது என்னவென்றால், திராவிட தந்தை ஆகிய பெரியார் என்ற இ.வி.ராமசாமி அவர்கள் தன்னை நாத்திகர் என்பதை வெளிப்படையாக பிரபல படுத்தி, தெய்வம் கடவுள் என்ற மரபையே கொச்சை செய்த பல நிகழ்களில் பெருமையுடன் தலைமை புரிந்தவர் ஆவார்.
அப்படி இருக்கையில், காஞ்சி மடத்தின் பெரியவர் பாதுகாப்புக்கு பெரியார் என்ற இ.வி. ராமசாமி அவர்கள் முதல்மை தாங்கி விட்டு மறு பக்கம் ஆன்மீகத்தை அவதூர் செய்வது திராவிடத்தின் கடமையாக்கினவர். இப்படி இரு துருவம் படைத்தவர்கள் எந்த பக்கமும் சாய்வது அரசியல் ரீதியென்றே நிரூபிக்கப் படுகிறது.
அதே மாதிரி திராவிட போலி வேடம் பல விஷயங்களில் காணலாம். சனாதன தர்மமும் சரி, ஹிந்தி சமஸ்க்ரிதம் ஆகிய வட மொழிகளை ஆதி நாளிலிருந்து இந்நாள் வரை ஆதரிப்பவர்கள். எந்த மொழியையும் கற்பது சேதமில்லை. அதன் நன்மையை உணர்ந்து அதன் படி மனித நலனிற்கு பயன் படுத்தலாம். நான் ஹிந்தி சமஸ்க்ரிதம் தமிழ் ஆகிய மொழிகளை பள்ளியில் கற்றுக்கொண்டதை நன்மையாகத்தான் கருதுகிறேன். அதே சமயத்தில் எந்த மொழியையும் தாய் மொழியோ அல்லது ஒரு மாநிலத்தின் பொது மொழிக்கு போட்டியாகவோ இல்லா விடில் பழமை மொழியின் இடத்திலிருந்து அகற்றுவதற்காக செயல் பட்டால் அது எதிர் மறையான செயலாகும்.
ஆனால் திராவிடம் ஹிந்தியையோ அல்லது சனாதன தர்மத்தை மறுப்பது போல் நாடகம் ஆடுவது தமிழ் நாட்டின் மக்கள் வாக்கை அதாவது வோட்டு பெறுவதற்காக திராவிட கழகம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
திராவிடம் முன்னாள் முதல் அமைச்சர் மூ.கருணாநிதியால் திறக்கப்பட்ட டெல்லியில் – டெல்லி தமிழ் பள்ளிகூடம் தமிழ் நாட்டின் மக்கள் வரியின் தொகையிலிருந்து வழங்கப்படும் மிக பெரிய பண உதவியாகும்.
அப்படி ஆயினும், இந்த பள்ளிகள் தலை நகரமாகிய டெல்லியில் எல்லா கிளைகளிலும் 99.99% பிராமணர்கள் தான் பிரின்சிபல், ஆசிரியர், ஆசிரியை பதவியில் வேலை புரிந்தார்கள். அதே போல் மாணவர் மாணவிகளும் 99.99% பிராமணர்கள், மீதம் 0.01 % சூத்திரனென்று அழைக்கப்பட்ட மாணவர் மாணவி பெரும்பாலும் சேலம் மாவட்டத்திலிருந்து டெல்லி வீடுகளில் வீட்டு வேலை புரிபவர்களாகத்தான் அப்பொழுது இருந்தது அவர்களின் நிலமை. இந்த பள்ளிகளில் சேலத்தைச் சேர்ந்த மாணவர் மாணவிகள் ஒதுக்கப்பட்டுத்தான் இருந்தார்கள். அவர்கள் வகுப்பில் கூட ஓரத்தில் கடைசி வரிசையில் தான் அமர்த்த பட்டிருந்தார்கள்.
இந்த விபரம் எனக்கு எப்படி தெரியுமென்றால், நானும் அந்த பள்ளியின் வகுப்பில் அச்சமயம் மாணவியாக படித்தவள். அவர்கள் நிலமையை பார்த்து பரிதாபம் படுவதை விட, என் சிறு வயதில் வேறு எதுவும் அப்பொழுது என்னால் செய்ய முடியவில்லை.
மேலும், தமிழ் நாட்டின் பொருளாதார உதவியினால் அமைக்கப்பட்ட டெல்லியில் இந்த பள்ளிகளில் தமிழ் தவிர ஹிந்தி சமஸ்க்ரிதம் கட்டாயமாக்கி முக்கியத்துவம் கொடுத்திருந்ததை அன்றைய ஆட்சியின் திராவிட கட்சிகள் நன்றே அறிவார்கள். அப்படியிருந்தும் ஹிந்தி சமஸ்க்ரிதம் திணிப்பையொற்றி ஆதரவுதான் இருந்ததேயொழிய, எதிர்ப்பு ஒன்றுமில்லை என்பதை புரிவது கடினமில்லை. இந்த சூழ்நிலை சூத்திரரென்ற சேலத்தின் மாணவர் மாணவிகளை அதிகம் பாதித்ததைப் பற்றி திராவிட ஆட்சியோ அல்லது பெரியாரோ கவலையோ இல்லாவிட்டால் கவனிக்கவுமில்லை.
சனாதனம் கடைப்பிடிக்கும் மனு தர்மத்தின் சாதி வர்கத்தின் படி நான் ஒரு சூத்திரச்சி என்பதை அப்பொழுது என் பிராமண வகுப்பினரும் சரி, பிராமண ஆசிரியர் ஆசிரியையும் நம்ப வில்லை. அப்படியே அவர்கள் அறிந்த பட்சத்திலும், அதை அவர்கள் பொருட் படுத்தாத காரணம், நான் சூத்திர வர்கத்தைப் போல் காணவில்லை, பேச்சு பழக்க வழக்கங்கள் அது போலில்லை என்ற ஒரு அபிப்பிராயம்.
நான் எப்பொழுதும் சாதி / ஜாதி என்ற வியாதிக்கு மகத்துவம் கொடுத்தது கிடையாது. என்னை பொறுத்த வரை குணம், மனம், பண்புதான் மனித அடையாளம். மற்றதெல்லாம் கடற் கரை மண்ணில் கோபுரம் செய்து ரசித்து கொண்டிருக்கும் நேரத்தில், கடல் அலை அந்த கோபுரத்தை திரும்பவும் மண்ணில் சேர்த்து கடலுக்குள் மூழ்கிச் செல்வது போல் தான் மனித ஜென்மத்தின் பிறப்பு குறிப்பு.
மனு தர்மத்தினால் உருவாக்கிய என்னுடைய சூத்திரமென்ற வர்கத்தை அடிக்கடி சுற்றி காண்பித்து கீழ் தரமாக நடந்தது என் தூர்வாஷ்டமாக நான் புகுந்த வீட்டின் மூத்த மருமகளான ஒரு கன்னட பிராமண பெண்மணி. அதையொற்றி புகுந்த வீட்டினர் மேலும் செயல் பட்டது ஒரு அனுபவமாகும்.
அதற்க்கு பிறகு, என் சூத்திரம் என்ற அடையாளத்தை அரசியலாக்கியது கடந்த பதினைந்து ஆண்டுகள் நான் பொது தலத்தில் அறிமுகம் ஆனா பின்பு இன்று வரை நடை பெரும் காவியமாகும்.
இதில் சுவாரசியமானது என்னவென்றால், என்றைக்குமில்லாமல் ஒரு சூத்திரச்சி என்று சொல்லி அதிலும் தலித் என்ற பட்டத்தையும் சூடினவர்கள்தான், என் அடையலாம், வாழ்க்கை, கர்ம பலன், ஆக மொத்த என் சகல சுய உரிமைகள், பண்புகளை தனதாக்கி, தன் தீராத புகழ், பொருள், அதிகார பசி போன்றவைக்கு இந்நாள் வரை செயல் பட்டு வருகிறார்கள்.
இதற்கும் மேல், ஒரு சூத்திரச்சி என்பவளின் என் பாணிகளையும், அன்றாட வாழ்க்கை முறைகளையும் தனதாக்கிக் கொண்டு முற்றிலும் அதை தன் பெயர், வெளிபரப்பு ஆகியவைக்கு பயன் படுத்துபவர்கள் அனைவரும் பிராமண குலத்தைச் சான்ற பெண்மணிகள்தான். அதிலும் திரையுலகம், அரசியல் சார்ந்தவர்கள், என்னை வைத்து தனது இச்சைகளை கையாளுவது ஐதீகமாகி விட்டது. எது வென்றாலும் கர்ம வினைகள் யாரையும் விட்டு வைப்பதில்லை. அவரவர் கர்ம பாரங்களை அவரவர் தான் சுமக்க வேண்டிய தருணம் இயற்கையின் நீதியாகும். இதை யாரும் தவிர்க்க முடியாது என்பதை இச்சமயத்தில் தெய்வம் இந்த பிறவியிலேயே தெளிய படுத்திருக்கிறது.
முடிவில் இந்த தொகுப்பை பொறுத்த வரையில், திராவிடமும் சனாதனமும் இணை பிரியாத ஒற்றை உறுப்பினர். இருவரின் கோட்பாடுகளும் கோரிக்கையும் ஒன்றேயாகும். அதாவது இருவருமே தன் ஆதிக்கம் நீடிக்க எதுவானாலும் செய்ய தயங்க மாட்டார்கள் என்பதை தன் செயல்கள் மூலம் இயங்கியிருப்பதை அவர்கள் மறுக்க முடியாது. இது தான் கசப்பான உண்மை.
இதோடு தற் சமயம் விடை பெற்று கொள்கிறேன்.
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.