தமிழ் நாடு பிரச்சனைகள்
பத்மினி அர்ஹந்த்
தமிழ் நாடு தற்ச்சமயம் அரசியல் சினிமா உலகத்தின் சதியில் சிக்கிக் கொண்டுத் தவிப்பதை ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் வேறு விதத்தில் சுற்றிக் காண்பிக்கிறார்கள். இது வழக்கமான செய்கைகள்தான். தமிழ் நாடு ஆண்டாண்டு காலங்கள் திரை உலக உறுப்பினர்களின் கைதியாக மாறி இந்நாள் வரை விடுதலை என்ற பாக்கியத்தைப் பெற முடியாமல் அவதிப்படுவது தெளிவாகத் தென் படுகிறது.
தமிழ் நாட்டின் அரசியல் சரித்திரத்தில், திரை உலகத்தைச் சேர்ந்தவர்களே மாற்றி மாற்றி ஆட்சி செய்து இப்பொழுது அதே திரை உலகக் கதா நாயகர்கள் அரசியல் பதவியை தன் பிறவியின் உரிமையென்று கருதுகிறார்கள். தமிழ் நாட்டில் மற்ற தொழிலைச் சேர்ந்தவர்களிடம் திறமை இல்லாத மாதிரியும், தமிழ் நாடு அரசு சினிமா துறையிலிருந்துதான் ஆட்சி புரிய வேண்டுமென்ற மனப்பான்மையை உருவாக்கி தமிழகத்தின் அடிப்படையே சினிமாதானென்று உறுதிப் படுத்துகிறார்கள்.
இது தமிழ் நாட்டிற்கு பொருத்தமில்லாத விதி. திரை உலகத்தின் நடிகர்கள் நடிகைகள் மக்கள் கொடுத்தப் பணத்தில்தான் செல்வந்தர்களாக மாறி, அதற்கு கைமாறாக மக்களுக்கு அவர்கள் எவ்வளவோ செய்யலாம் அதாவது மக்கள் கொடுத்தப் பணத்தை அவர்களுக்கே கொடுப்பதற்குப் பதில், மக்கள் கட்டும் வரியை மேற்கொண்டு அரசியல் மூலம் தன் சொத்தாக்குவதில் மும்மரமாக உள்ளார்கள். இது ஒரு வியாபாரமாகி விட்டது.
இந்த நடிகை நடிகர்கள் முன்னாடியும் சரி இப்பொழுதும் எடுத்துக் கொண்டால், இவர்கள் அரசியலில் ஈடு படாமலே, பொது சேவையில் தன் அக்கறையை மக்களிடம் காண்பித்திருக்கலாம். அதை விட்டுட்டு, பதவி இன்னும் புகழ் வேண்டுமென்ற போதையில் மிதப்பதால் அரசியலில் மற்றவர்களின் வாய்ப்பை பறிப்பதற்கு முன்னணியில் உள்ளார்கள்.
மற்றபடி இரண்டு திராவிட கட்சிகளும் இந்த கடந்த ஐம்பது வருடங்கள் ஏதோ நிலை நாட்டிய மாதிரி அவர்கள் தொண்டர்கள் வழியே ஊடகங்களில் தவறான தகவல் கொடுப்பது தமிழ் நாட்டின் மக்களின் அறிவை சோதிப்பதாகும். உண்மையில் பார்க்கப் போனால், இரண்டு திராவிட கட்சிகளின் தலைவர்களும் போட்டா போட்டியில் கலந்து கொண்டு தமிழ் நாட்டின் சொத்தை சூரையாடுவதில் வல்லவர்களென்று நிரூபித்தார்கள்.
தி.மூ.காவின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் ஊழல், மிரட்டல், சர்வாதிகாரம், கொல்லை, கொலை என்றவாறு எத்தனையோ அநியாயங்கள் இமய மலை உயரத்தைப் போல் இருந்த பட்சத்தில், எம்.ஜி.ரின் துணைவி நடிகை ஜெயலலிதாவின் வரலாறு அதை விட மோசமானது.
ஜெயலலிதாவின் அட்டூழியங்கள், அகம்பாவம், ஆணவம், கல்லம், கபடம், பொது மக்களை குடி வெறியில் மூழ்க வைத்து, எத்தனையோ குடும்பங்களின் பாவத்தைக் கொட்டிக் கொண்டு தன் தீய கர்ம வினைகளின் பலனைத் தன்னுடன் சுமத்திக் கொண்டு சென்றார். இந்த மன்னிக்க முடியாத குற்றங்களை செய்து விட்டு, இவர்களை தெய்வப் பிறவியென்று அழைப்பது மிகவும் பெரிய அபராதமாகும். அது மட்டுமில்லாமல் இவர்களை போற்றி ஒரு புதிய பாத்திரம் அமைப்பதில் கட்சியின் பிரதிநிதிகள் சலைக்காமல் பொய் சொல்லி வீணாக தன்மேல் பாவத்தைச் சுமந்து கொள்கிறார்கள்.
யாரும் மற்றவர்களின் நல்ல கர்மங்களையோ அல்லது அவர்களின் சரித்திரம், தனித்துவம், பாணி, பாங்கு, அடையாளம் ஆகியவைகளை தனதாக்கிக் கொண்டு மக்களையும், ஊரையும், நாட்டையும், உலகத்தையும் ஏமாற்ற முடியாது. அப்படி செய்பவர்களின் கதி கொடிய நிலமைக்கு ஆளாகி, கடுமையான விதியை சகிக்க வேண்டியதாகும். இது மனிதர்களால் ஏற்படுத்திக்கிற வினைகளாகும். முக்கியமாக அரசியல் மற்றும் சினிமா துறையிலிருப்பவர்கள்தான் இப்படி அலைகிறார்கள்.
கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒருத்தரை ஒருத்தர் சிறைச்சாலைக்கு அனுப்புவதிலேயே காலம் கடந்தது மக்களுக்கு ஞபாகம் வர வேண்டும். எம்.ஜி.ஆர் பங்கிலும் நிறைய குற்றச் சாட்டுகள் உள்ளன. ஆக மொத்தம் இவர்கள் எல்லோரும் ஒரே வகையினில் சேர்ந்தவர்கள்தான். அதை புதுமையான ஓவியத்திலோ, காவியத்திலோ, கதையிலோ உரைத்து இவர்களின் சுய ஈடு பாட்டுக்கு ஏறு மாறாக சொற்பொழிவு செய்வது தமிழ் நாட்டின் மக்களுக்கும் அவரவர் மனசாட்சிக்கும் செய்கிற பெரிய துரோகமாகும்.
தமிழ் நாட்டில் ஏகப் பட்ட பிரச்சனைகள் உள்ளன. அதை நிராகரித்து, ஜெயலலிதாவை உயர்த்தி வைத்து, அவர் செய்த அட்டகாசங்களை மறைத்து, அவருக்கு மகுடம் சூடுவது ஒரு முட்டாள்தனமாகும்.
பொதுவாகவே அரசியலின் முதல் கோரிக்கை அவரவர் செய்யாத நல்ல காரியங்களை செய்ததாகவும், அதற்க்கு எதிராக அவர்களின் கெடுதல்களை மூடி சமாதி செய்வது சகஜமாகும். இந்தியா இந்தக் கட்டத்தில் தற்ச்சமயம் இருக்கிறது. மத்திய அரசு கட்சிகள் இதை விட பல மடங்கு தாழ்ந்தவர்கள். ஊழல் கூட்டங்கள் கூட்டணி சேர்ந்து அரசு நடத்த தீர்மானிப்பது அவர்களின் சேர்க்கையில் பலனை விட பலஹீனத்தைக் காணலாம்.
பாஜக கொள்கைகள் காங்கிரஸ் நோக்கம் மக்கள் மேல் பற்றுதல் என்றால் மக்களின் வரியை அவரவர் குறிப்பிட்ட தொழில் அதிபர்களுக்கும் தன்னுடைய பங்கிருக்கும் அபகரிக்க மாட்டார்கள். இவர்கள் நடத்தும் நாடகத்தில் உதவுவதற்கு சினிமா நடிகர் நடிகைகள் தயாராக இருக்கும் பொழுது, மக்கள் நெற்றியில் மூன்று நாமமிடுவதற்கு சிரமமில்லை. தன் அபராதங்கள், ஊழல்கள், அநேக குற்றங்களை குற்றமாகக் கருதாமல், அதை மக்களின் எதிர்ப்பாக நோக்கி ஆயிரம் சாக்குகளை காரணமாக விளக்கும் காட்சியைத்தான் பார்க்க முடிகிறது.
மீண்டும் சொல்லப் போனால், மத்திய அரசும் அதாவது பாஜக காங்கிரஸ் மற்றும் தமிழ் நாட்டின் எல்லா கட்சிகளும் கூடி தமிழர்களுக்கு இந்தியாவிலும் சரி இலங்கையிலும் துன்பத்தையும், வேதனையையும்தான் இந்நாள் வரை அளித்திருக்கிறார்கள். இது எந்த மேதையையோ அல்லது கண் வித்தைக் காட்டும் மந்திரவாதி, தந்திரவாதியை வைத்து சமாளிக்க முடியாது.
இந்த லட்சணத்தில், உண்மையை வெளிப்படுத்தினால் திரைப் படம் மூலம் பணம் புகழ் பித்து பிடித்த நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோரை வைத்து தன் கிழ் தரமான குணங்களை காண்பிப்பதில் தயங்குவதில்லை. இதுதான் தற்காலத்தின் ஐதீகமாகி விட்டது. அப்புறம் இதை செய்த பின்பும், திராவிட கட்சிகளும் மத்திய அரசு கட்சிகளும் தாங்கள் எதையும் தாங்கிக் கொள்ளும் இதயங்கள் என்று பொய் விளம்பரம் செய்வதிலும் அஞ்சுவதில்லை.
இந்த தலைப்பில் கடைசியாக, திரைப்பட நபர்கள் மற்றும் அரசியல் வாதிகள் ஆண்டவன் கொடுத்த மூலையை உபயோகித்து சுய முயற்ச்சியில் தானாக எதையும் செய்வதில்தான் மதிப்புண்டு. அதற்கு விரோதமாக பிறரின் உழைப்பையும், அவர்களின் அசலான உண்மையான தோரணைகள், பண்பாடு, கருத்துக்கள், செயல் திட்டங்களை நகல் செய்து அதை தனதாகவோ இல்லாவிட்டால் அரசியல் கட்சி அவர்களின் தலைவி ஜெயலலிதாவாக காண்பிப்பது குற்றவியல் நடத்தையாகும். இது கண்டன தக்கவையுமாகும்.
நான் ஒரு தடவை சொல்வது ஒரு லட்சம் முறை சொன்னது மாதிரியாகும். நான் ஜெயலலிதாவோ அல்லது அவரவர் கற்பனைக்கேற்றபடி ரூபம் ஏற்றுக்கொள்ளும் அவர்களின் அடிமையல்ல. அப்படி என்னைக் கருதுபவர்களின் கதி என்னவாயிற்று என்று நான் சொல்ல அவசியமில்லை. உலகத்திற்கு முன்னே நடந்து கொண்டிருக்கிறது. நல்ல மாட்டிற்கு ஒரு சூடென்ர முதுமொழியுடன் இந்த விஷயத்தை முடித்துக் கொள்கிறேன்.
நன்றி.
வணக்கம்
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
எழுத்தாளர், இயக்குனர், தொகுப்பாளர்
பத்மினிஅர்ஹந்த்.காம்
ப்ரக்ரிதி.பத்மினிஅர்ஹந்த்.காம்
Leave a Reply
Your email is safe with us.