தமிழ் நாடு – அரசியல் மற்றும் அரசியல் விமர்சனம்
பத்மினிஅர்ஹந்த்
தமிழ் நாட்டின் ஆளும் கட்சி திமுக முதல் அமைச்சர் மூ.க.ஸ்டாலின் தனது அரசியல் தோற்றத்தைத் தற் சமயம் மத்திய அரசின் சூட்சமம் படி மாற்றிக் கொள்வதின் பட்சத்தில்,
முதல் அமைச்சர் என்ற பொறுப்பைத் தவிர்த்து, அரசியல் அமைக்கும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு அதை மதித்து ஜன நாயகத்தில் சட்டம் அமைப்பவர்களுக்கும் அதே சட்டம் சாரும் என்பதை முதல் உதாரணமாக செய்ய வேண்டிய சேவை இவ்வாறாகும்.
Swiss Bank / சுவிஸ் வங்கி மற்றும் பல தீவு நாடுகளில் திமுக தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்ற வாரிசு அரசியல் மூலம் தமிழ் நாட்டிற்கு சொந்தமான தமிழ் நாட்டின் பொது மக்களைச் சேர்ந்த சொத்துக்கள் கருணாநிதி தலைமுறைகள் பெயரில் சேமித்து வைத்திருக்கும் அனைத்து பணம் பொருள் யாவற்றையும் தமிழ் நாட்டிடம் ஒப்படைக்கவும்.
ஏன்னென்றால், உத்தமர் என்ற பெயர் வெறும் பெயரில் மற்றுமில்லாமல் அதை செயலில் காண்பிப்பது ஒரு அரசியல் தலைவர் தன் மாநில குடிமக்களுக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமையாகும்.
அப்படி ஒப்படைப்பதின் மூலம், தமிழ் நாட்டின் பல பிரச்சனைகள் நீங்கி மக்கள் பொருளாதார நிலமையும் சீராக அமைவதற்கு வாய்ப்புள்ளது.
இதை சவாலாக ஏற்றுக் கொண்டாலும் சரி அல்லது மக்கள் நலனையொற்றி தாங்கள் ஓயாமல் தங்களது சக்திக்கு மீறி உழைப்பதாக ஈரோடு இடைத் தேர்தல் சற்று முன்னாள் தாங்கள் ஏற்பாடு செய்த பேட்டியில் கூறியதை வைத்து மக்களுக்கு வேண்டிய இந்த தேவையான சேவையை தங்கள் முன் வைக்கப் படுகிறது.
இரண்டாவதாக – தாங்கள் ஈரோடு இடைத் தேர்தலில் பாரி வள்ளலையும் மீறி வாக்காளர்களுக்கு அவர்களின் வாக்கு பெறுவதற்காக ஆயிரக் கணக்கில் பணத்தின் மதிப்பை பொருட் படுத்தாமல் ஏதோ கோழிப் பண்ணையில் அங்குள்ள கோழி, குஞ்சு, சேவல்களுக்கு தவிடு ஆகாரம் தூவுவது போல் வாக்காளர்களுக்கு தாங்கள் பணம் விநியோகம் செய்ததை தேர்தல் முடிவில் அறுவடையும் செய்தீர்கள். அதற்க்கு தங்கள் சேவையிலுள்ள ஊடகம் மற்றும் அரசியல் சந்தர்ப்பவாதிகள் பிரபலமாக பிரச்சாரம் செய்தார்கள்.
வாக்காளர்களுக்கு தாங்கள் வாரி வழங்கிய பணம் தங்களிடம் எவ்வாறு செய்ய முடிந்தது?
தாங்கள் மிகவும் எளிமையயாக வாழும் வாழ்க்கையென்ற பிரச்சாரம் ஒரு பக்கமிருக்க, தாங்கள் தற்போது அளித்த பேட்டியில் தங்கள் சக்திக்கு மீறி செயல் படுவது என்பது தேர்தலில் தாங்கள் பணம் விநியோகம் சார்ந்து கூறியதா என்பதை தமிழ் நாடு வாக்காளர்க்கு விளக்கவும்.
தங்களின் ஊடகம் மற்றும் தாங்கள் மேல் அக்கைறையுள்ள பத்திரிக்கையாளர்கள் என்று சொல்லும் நபர்கள், முன்னாள் IAS அதிகாரி ஆகியோர் தங்களின் அறம் நிறைந்த வாழ்க்கையின் பயணத்தை பிரச்சாரம் செய்யும் பட்சத்தில்,
எவ்வாறு தாங்கள் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் விரைய இயல்கிறது என்பதையும் தமிழ் நாட்டின் மக்களுக்கு விரிவாக பொது தளத்தில் செய்து, நாடாளு மன்றத்திலும் அதற்க்கு ஆதாரம் காண்பித்து ஜன நாயக அரசு என்பதை பிரதிபலிக்கவும்.
மூன்றாவதாக – இந்தியா அதிலும் தமிழ் நாடு வாரிசு அரசியல் கலாச்சாரத்திலிருந்து எப்பொழுது விடுதலை பெறும்?
இப்படிக்கு
பத்மினிஅர்ஹந்த்
————————————————————————————
அரசியல் விமர்சகர் விமர்சனம்
கோயில் மணி
v.
கயவர்களின் மணி
பத்மினி அர்ஹந்த்
அயோக்கியம், அநியாயத்திற்கு அளவே இல்லாமல் அரஜாகத்தை ஜன நாயகம் என்ற பெயரில் தன்னையும், பொது மக்கள், நாடு, உலகம் ஆகியோரை ஏமாற்றிக் கொண்டு கண்கட்டி வித்தை புரியும் தீயவர்களின் தரகர், தூதர், தபால் காரர், தவில் வாசிக்கும் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டு அரை குறை ஆங்கிலத்தில் எக்கு தப்பான உதாரணங்களை உரையாடலில் திணித்து தன் அறியாமை ஆணவத்தை வெளிப்படுத்தும் செயலுக்கு பெயர் முட்டாள்தனம்.
அதோடு கொலை, கொள்ளை, தேச துரோகம், தீவிர வாதம், ஹிம்சை, சமுதாய கலவரம்…இத்தியாதி போன்ற பல் வேறு தீய செயல்களின் அதிபர் மற்றும் தீமைக்கும்,
தீயவரின் வாயாக வந்து இந்தியாவின் காலமான முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சிப்பதுபோல் மறைமுகமாக யார் மேல் வன்முறை இருக்கிறதோ அவர்களை குறி வைப்பது அயல் நாடு அந்நியர்கள் கிரிமினல் (Criminal) குழுவின் கோழைத்தனமான proxy மூலம் தாக்குதலை பின் பற்றும் அடிமைத்தனமாகும்.
நேரடியாக பேசுவதற்கு பதில் மறை முகமாக அயல் நாடு அந்நியர்கள் வகுத்த இரட்டை அர்த்தத்தில் தாக்குவது தரம் கெட்ட கேவலமான செயலாகும்.
கோழைகள் தன் குற்றங்களை சமாளிக்க முடியாத கையாலாகாதவர்கள் தான் இவ்வாறு ஈடு படுவார்கள்.
செய்தி பத்திரிக்கையாளர் அரசியல் விமர்சகர் என்ற மகத்தான பொறுப்புள்ள கடமைக்கு இத்தகைய மூடி மறைத்து தாக்குவது சில்லரைத்தனம்.
பத்திரிக்கையாளர் என்ற தரத்திற்கு தகுதியற்றவர்கள் செயல் படுவதினால் இந்தியாவின் அரசியல் சீரழிந்து படு மோசமாக உள்ளது.
இந்தியாவின் தற்கால பிரதமர் தனது 56” மார்பை அடிக்கடி விளம்பர படுத்தும் பொழுது, ஒரு பெண்மணியான இந்திரா காந்தியை பின்பற்றுவதாகக் தனது மணிக்கு வாலாட்டும் மூத்த பத்திரிக்கையாளர் என்ற தூதுவர் மூலம் துச்சமான தர்க்கத்தை வைப்பது தனது சருகுகின்ற அரசியலும் தீய வரலாறையும் முன் வைக்கிறது.
இந்திரா காந்தியின் கொள்கையை பின் பற்றும் இந்திய பிரதமர் இந்திரா காந்தியை போல் நேர் கானல் செய்தி ஊடகம் பத்திரிக்கையாளர் குழுவுடன் பொது தளத்தில் சந்திப்பது – Open Press meet in India and Abroad ஏன் சங்கடமாக இருக்கிறது?
தன் பிரதமர் பதவியை தக்க வைப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்யும் துணிச்சல் ஜன நாயகத்தின் மிகவும் முக்கியமான Public Press Conference சந்திப்பதற்கு திறமை இல்லையா?
இல்லாவிட்டால் எல்லா விஷயங்களுக்கும் பதில் – ஊடகம் மூத்த பத்திரிக்கையாளர் என்ற கூலி பட்டாளத்தை ஏவி விட்டு காலமான இந்திரா காந்தி, ஜெயலலிதா பெயரை சொல்லி தரம் கெட்ட வாக்கு வாதத்தை வைத்தால் பிரதமர் அந்தஸ்து கூடாது அதற்க்கு மாறாக இன்னும் அதல பாதாளத்தில்த் தான் முடியும்.
ஊடகம் மூத்த பத்திரிக்கையாளர் என்ற கூலி பட்டாளத்தில் உள்ள வித்தியாசம் – Arnab Goswami தன்னை ஆளும் மத்திய அரசின் கூலி பட்டாளத்தின் உறுப்பினர் என்று பெருமையாக கூறி கொள்வதும்,
அதே சமயத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த சமூக ஊடகத்தில் மூத்த பத்திரிக்கையாளர் அரசியல் விமர்சகர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு மத்திய அரசு பிரதமர் அராஜகம் சர்வாதிகாரத்தை பூசி மொழிகி இந்திரா காந்தி என்ற பெயரை கூறி இரட்டை அர்த்தமுள்ள கருத்தை வைப்பது – Arnab Goswami செயல் படுவதை விட பல மடங்கு இழிவான தமிழ் நாட்டிற்கு செய்யும் துரோகமாகும்.
மேம்படுத்தல் (Update 04/03/2023):
மீண்டும் உறுதியாக கூறுகிறேன் – அந்நியர் அயோக்கிய துஷ்டர்கள் உருவாக்கிய கோழைத்தனமான ஜாடை மாடையாக இரட்டை கருத்தில் தாக்கும் பண்பாட்டை கடந்த 15 வருடுங்கள் தொடர்ந்து இந்நாள் வரை உலக சமுதாயத்தின் நீதி நியாயத்திற்கு கட்டுப்படாமல் ஒழுக்கமற்ற செயலான ஒருவரையே அதாவது என்னையே விதி விளக்காக குறிவைத்து அதிகமாக அந்நியர் அடிமை அடியாரான இந்தியா அரசியல் அவர்களின் கீழ் குறிப்பிட்ட உற்றார் உறவினர்;
இந்திய அரசியல் உறவினர் – ஊடகம், பத்திரிக்கையாளர், பெரும்பாலும் திரையுலகம் ஆகியோர்கள்,
அவர்களை விட்டால் வேறு எங்கும் அந்நிய கிரிமினல் குழு ஏவல்களால் காழ்ப்புணர்ச்சி வகையில் இந்நாள் வரை,
குறிப்பாக பிறரின் கர்மங்களை என் தலையில் சுமப்பது ஆகியவை – அது யாராக இருப்பினும், கடந்த காலம், நிகழ் காலம் சம்பவங்களை குறித்து அவரவர்களின் பாவ வினைகள், அரசியல் மற்றும் எதுவும் சம்பந்தப் பட்ட அவர்களின் எந்த செயலும் குற்றம், குறைகள், தப்பு தண்டாக்கள் ஆகியவை அவர்களையே சார்ந்தன. என்னை இதில் எந்த வகையிலும் இணைப்பது உலக சட்டப் படியும் நெறிமுறைகள் வழியில் என் சுய உரிமையின் கட்டு மீருகையாகும்.
இவை எல்லாவற்றையும் இந்நாள் வரை நடத்தியதை கம்பிரமாக ஆட்சேபனை செய்கிரேன்.
இத்தகைய நடத்தைகள் முற்று புள்ளி வைத்து கைவிடாவிட்டால் அதற்க்கு தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இந்த தரமற்ற இரட்டை வால் பாரம்பரியத்தை –
நான் பத்மினி அர்ஹந்த் மிகக் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறேன்.
இந்த செய்கைக்கு பின்னால் இருப்பவர்களை அவர்களின் கர்ம வினையே இந்த ஜென்மத்தில் தண்டித்து கொண்டிருக்கிறது.
அதோடு இறைவன் இதற்க்கு தகுந்த விதியையும் விதிக்கிறார்.
யாரும் எவரையும் அனாவசியமாக உதாசீனம் அலட்சியம் செய்து அதன் பலனை தவிர்க்க இயலாது.
அதனால் கடவுள் இப்பிறவிலேயே அனுபவிக்கும் தருணம் உருவாக்கியுள்ளார்.
இது மறுக்க முடியாத தெய்வ நிபந்தனை.
கள்ளம், கபடம், கல்மிஷம், நயவஞ்சகம், ஆணவம் ஆகியவை எப்பொழுதும் அவமானத்தைத் தான் தரும் என்பதை எக்கணமும் இத்தகைய பேர்வழிகள் மறக்கக் கூடாது.
கடைசியாக கோயில் மணிக்கு எதிர் மறையாக கயவர்களின் மணியும் சங்குமாக முழங்கும் சத்தம் கேடாகும். இதுதான் வேறுபாடு.
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.