ஆவியின் அவஸ்தை
பத்மினி அர்ஹந்த்
மனித பிறவி கிடைப்பதே பெரும் பாக்கியம். அப்படி இருக்கையில் இந்த மனித ரூபத்தில் ஆவியாக உலாவும் பல பேர்களின் கதி என்னவென்று தெரிந்து கொள்வது அவசியம். முக்கியமாக அந்த ஆவிகளுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் இது மிகவும் பொறுந்தும். யாரொருவர் தன் வாழ்க்கையை வாழாமல், மற்றவரின் வாழ்க்கையை வாழ்ந்தால், அவர் இந்த பிறவியிலேயே ஆவியாகி அலைவதை கண்ணார காணலாம். இந்த மனித ரூபத்தில் உலாவும் ஆவிகள் பெரும்பாலும் துஷ்டர்களின் தூதர்கள், சேவகிகள், அடியார்கள், அடிமையாவார்கள். இவர்களின் நிலமைக்கு காரணம் புகழ் பொருள் பேராசை இவர்களை இவ்வழிக்கு இழுத்துச் செல்வது.
இவர்களின் நினைப்பு என்னவென்றால் இவர்கள் குறி வைக்கும் நபரின் வாழ்க்கையை தனது வியாபாரமாக்கிக் கொண்டு, அதன் மூலம் தனது சுக போகத்தை சேகரிப்பதோடு, இவர்கள் குறி வைப்பவரை இம்சைப் படுத்தும் உணர்ச்சியில் மகிழ்ச்சியை காண துடிப்பவர்கள் இந்த ஆவிகள். இவர்களின் இந்த கொடுரூமான நிலமை தன்னையே தண்டிப்பதை உணராமல், இவர்களின் வாழ்க்கை ஒரு மாயக் கண்ணாடியாக மாறியது இவர்களுக்கு தெரியவில்லை. அப்படியே விழிப்புணர்வு நிகழ்ந்தாலும், இந்த ஆவிகள் வெகு தூரம் சென்று விட்டதால், இவர்களின் வினை இவர்களுக்கு விதியாக விதிக்க படுவது இந்த கால கட்டத்தில் மற்றுமில்லாமல் இவர்களின் மனித சடலம் மரணமென்ற பயணத்தில் அழிந்த பிறகும், இவர்களை துரத்துவது இவர்களுக்கே வெளிச்சமில்லை. அதற்க்கு பிறகு, இவர்கள் மனித பிறவியில் தன் முன் ஜென்ம பாவங்களோடு, இப்பிறவியின் கர்ம பலன்களின் கணக்கை தீர்த்து வைக்காமல், மேலும் தீய கர்மங்களை சுமந்து கொண்டு தன் ஆன்மாவிற்கு நிரந்தர தண்டனை கிடைப்பது தான் நிச்சயம்.
அதோடு இவர்களுக்கு மறுபடியும் மனித பிறவி சாத்தியமில்லாமல் போவதும் கட்டாயம். இவர்களின் அடுத்த பிறவி இவர்களை பிறவியின் வரிசையில் தரை மட்டத்திலுள்ள ரகத்திற்கு செல்லப் படுவது தான் மிச்சம். இந்த கர்ம பூமியில் தன் வாழ்க்கையை வீணாக்கி, மற்றவரின் வாழ்க்கையை அபகரிப்பது அதாவது அவர்களின் வீடு, நடைமுறைகள், அவர்களின் வாழும் தோணி யாவற்றையும் முற்றிலும் கண் நோட்டம் செய்து, அதை வியாபாரமாக்கி விமர்சனம் செய்வதும், அவற்றை பரிகாரம் என்ற பாணியில் பிரச்சாரம் செய்தல், அப்பாவி பொது மக்களை ஏமாற்றி, அவர்களின் கண்களில் மண்ணை தூற்றி, தன் தலையில் மண்ணை வாரி போடுவது இந்த மோசடி செய்யும் சதிகாரர்களின் பரிதாபமான சோதனை இவர்களுக்கு தீராத வேதனையாகும். இவ்வாறான தீய துஷ்கர்மம் இவர்களின் துரதிரிஷ்டமாவது இவர்கள் தனக்குத் தானே கொடுக்கும் பல ஜென்ம துயரமாகும்.
திறந்த வீட்டில் நாய் நுழைந்தால் அந்த நாய் தன் தவறை உணர்ந்து தலையை குனிந்து கொண்டு அமைதியாக வெளியே போய் விடும். ஆனால் ஆறு அறிவை கொண்ட மனிதர்கள் மற்றொரு கண்டத்தில் வாழும் பிறரின் இல்லத்தில் திருடர்களாக மாறி தன்னுடைய திகல் ஜாலத்தைக் காண்பிக்கும் திண்ணக்கம் அவர்களின் மோசமான குணத்தை பிரதி பலிக்கிறதே தவிர அவர்களின் துணிச்சலை அல்ல.
நல்லவர்கள் போல் நடித்து, நயவஞ்சகம் நஞ்சை நடுபவர்கள், தனக்கும் தன் குடும்பத்தினர்க்கும் விஷமாவது இவர்களின் வினைக்கு கிடைக்கும் தப்பிக்க முடியாத பல ஜென்மத்திற்கு தொடரும் சாபமாகும்.
அப்படி இருக்கையில் குப்புசாமியாக அறிமுகமான வியாபார பெண்மணியின் செயல் குப்பையில் இவரை வீழ்த்தியது ஆச்சரியமில்லை. மற்றவரின் வாழ்க்கை, மணை ஆகியவைகளை அவர்களின் சம்மதமில்லாமல் சுய உரிமைக்கு எதிராக, தன் வியாபாரத்திற்கும், தனது போலி வேடத்திற்க்காகவும் பயன் படுத்துவது, இந்த பெண்மணி மற்றும் தன் இரண்டு பெண்கள் இவரின் மகள்கள், இவர் கணவர், இவர்களுக்கு பணம் கொடுத்து இந்த நாடகத்தை நடத்தும் சாத்தான்களுக்கும் விதிக்கப் பட்ட விதி – இவர்கள் இப்பிறவியில் உயிரோடு இருக்கும் பொழுதே ஆவியாகி அலையும் நிலை. இவர்களை இவ்வாறு ஆட்டி வதைக்கிறது. இவர்களுக்கும் இவர்களை போல் செயல் படும் ஆணவம் கொண்ட மற்ற தீயவருக்கும் இவர்களின் தீங்குகள் இவர்களுக்கு கற்பிக்கும் மிக பெரிய கல்வியாகும்.
இந்த பாடத்தை நிராகரிப்பது, இந்த குப்புசாமி பெண்மணியின் எந்த பரிகாரமும் இவருக்கும் இவரை சேர்ந்தவர்களுக்கும் உதவாது என்பதை அறிய வேண்டும்.
அதே மாதிரி, திரை உலகமென்ற துறை பிரச்சார கருவியாகி அக்கிரமம், அகம்பாவம், அநியாயம் மற்றும் பல் வேறு தீயவைகளின் குழுவினருக்கு சாதகமாக செயல் படுவது அந்த துறையின் அழிவை அச்சுறுத்திகிறது.
பார்க்கப்போனால், கண்ணியம், நேர்மை, நியாயம் ஆகியவைக்கு கட்டுப்பட்டவர்கள் பிறருக்கு துன்பம், வீண் வம்பு, சம்பந்தமில்லாமல் விவகாரத்தில் ஈடு படுவதில்லை. இவ்வகை நல்லவர்களை எந்த விதமான வசியமும் எதிர் மாறான வழியில் தூண்டுவதில் சுலபமில்லை. இதற்க்கு மாறாக பலஹீன சுயநலவாதிகள் பொதுவாக தீங்கு செய்பவர்களிடம் அடைக்கலம் தேடுவது அவர்களுக்கு சாதாரணம்.
அராஜகப் பேர்வழிகள் அவர்களின் தொண்டர்களான அனாவசிய வம்பை விலை பேசுபவர்கள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டியது – சாது மிரண்டால் காடு கொள்ளாது.
நெருப்பு என்று தெரிந்தும் அதில் விளையாடுவது கருகிய சாம்பல் ஆவது உறுதி என்பதை மறவேன்.
பிறருக்கு தீங்கு விளைதல், விதைப்பவரை வதைப்பது தான் இயற்கையின் நீதியான கர்மாவில் விதிக்க பட்ட கட்டளை. இதை யாராலும் மறுக்கவோ எதிர்க்கவோ முடியாது. ஏனெனன்றால் தன் வினை தன்னைச் சுடும், உரட்டியப்பன் வீட்டைச் சுடும்.
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.