ஆதிக்கம் மற்றும் அடிமைகளின் அவதி
பத்மினி அர்ஹந்த்
இந்த கலியுகத்தில் உயிர் வாழ்வதற்கு அவசியமான மூலப் பொருட்களுக்கு பஞ்சமிருந்தாலும் ஆதிக்கம் மற்றபடி மொட்டை அதிகாரம் ஆகியவைகளுக்கு பஞ்சமில்லை.
ஆதிக்கம் என்பது என்ன எதற்காக செலுத்தப்படுகிறது என்பதை புரிந்து கொண்டால் அடிமைத்தனம் முற்றும் ஒழியும்.
பொதுவாக ஆதிக்கம் என்பது பிறர் சுய உரிமையைப் பறித்து அவர்களை கட்டுப்படுத்தி தன் அடிமையாக வைக்கும் நிலையாகும்.
ஆதிக்கம் உருவாகிறது ஆதிக்கர்களின் எதிர் மறையான குணம், அவர்கள் பதவி, புகழ், பொருள் மோகத்தின் அடிமையாவதால் பிறரை இவர்கள் தன் கீழ் வைத்து அதன் படி தனது ஸ்தானத்தை உயர்த்திக் கொள்வது இவர்களுக்கு சகஜம்.
தான் மேலிருப்பதிற்காக மற்றவரை கீழ் வீழ்த்தும் வித்தையை இவர்கள் கடைப்பிடிப்பவர்கள் ஆவார்கள். பொதுவாக இப் பேர்வழிகள் அவ்வளவு திறமை, ஆற்றல் தன்னம்பிக்கை இல்லாதவர்கள். அப்படி இருப்பினும் இவர்கள் பிறரின் செல்வாக்கு, நல்ல செயல்கள் கர்ம பலன்களை திருடி அதை தனதாக்கிக் கொண்டு, யாரிடமிரிந்து திருடிகிறார்களோ அவரின் மீது இவர்களின் அலங்கோலம், ஆபாசம், அவமான வரலாற்றை சுமத்துவது இவர்களின் கை வரிசையாகும்.
இதில் என்ன சுவாரசியமான விஷயமென்றால், இந்த மாபெரும் அபராதத்தை இவர்களும், இவர்களுக்கு பின்னாலிருக்கும் சாத்தான்களும் இவர்களது பாசமென்றும், அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற நிபந்தனையையும் வைப்பவர்கள், இந்த மஹான் ஆத்மாக்கள்!
இவர்களோட கொடுமையை பாசமென்று கருதினால், இவர்களின் வெறுப்பு எவ்வளவு விஷமென்று அறிவதற்குபெரிய ஞானியாகத் தேவையில்லை.
எதுவானாலும், இந்த கூட்டணியின் விடா முயற்ச்சித் தீவினைகள், நயவஞ்சகம், கள்ளம், கபடம், கல்மிஷம் பிறரை துன்புறுத்துவதை தனது பொழுது போக்காக மாற்றி தன் மனித பிறவியை இழந்து நிரந்திர நரகவாசியாவதில் மும்மரமாக இருப்பதை தடுப்பது அனாவசியம்.
இதற்க்கு மாறாக, இவர்களின் தீயவைகளை சகித்து தன்னுடைய நற் செயல்களை நேர்மை, கண்ணியம், நியாயத்தில் செய்து வரும் பொறுமைசாலிக்கு சொர்கத்தைப் பெரும் பாக்கியத்தினால் இந்த தீயவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
மேலும் தொடரும்.
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்







mania as that is not going to deliver what is aimed at and desired in vain except confirming your asinine indulgence.




Leave a Reply
Your email is safe with us.