தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
பத்மினி அர்ஹந்த்
தீபாவளி திருநாள் ஹிந்து தர்மத்தின் முக்கிய பண்டிகையாகும். தீபாவளி குடும்ப பட்ஜெட்டில் ஒரு பெரிய தொகையை விழுங்கம் பண்டிகையும்மாகும்.
கடவுள் புண்ணியத்தில் வருடத்தில் ஒரு முறை கொண்டாடப் படும் இந்த விழா பட்டு புடவை வியாபாரத்திற்கு மிகவும் சாதகமானது. பட்டாசு, பட்டுப்புடவை விற்பனையில் லாபத்தை எதிர்பார்க்கும் பெரிய பண்டிகை.
கல்யாணத்தைத் தவிர்த்து, தீபாவளி பட்டு புடவையின் அழகையும், அருமையையும் அதைவிட அதன் விலை உடுத்துபவரின் மதிப்பையும் அதாவது பண வசதியையும் எடுத்துக்காட்டும் திருநாளாகும்.
ஏற்கனவே ஏற்ற தாழ்வுள்ள சமுதாயத்தில், பண்டிகை மூலம் பொருளாதார நிலமையை உற்சாகத்துடன் தெளிவாக வெளிப்படுத்தும் தினமாகும்.
பலகாரம், பட்சணமென்று வித விதமாக பதார்த்தங்களைப் பகிர்ந்துக் கொண்டு அளவுக்கு மீறி சாப்பிட்டு, அனாவசியமாக டாக்டர்களுக்கும் ஆஸ்பத்திருக்கும் இன்னும் நிறைய சம்பாதிக்கிற வாய்ப்பைக் கொடுப்பதில் ஒரு சிலர் தயங்குவதில்லை.
ரத்தக் கொதிப்பு, சக்கரை வியாதிகளை வழியக்க அதிகப்படுத்தவும், அப்படி ஒன்றுமில்லையென்றாலும், புதிதாக ஏதாவது ஒரு நோயை வரவழைப்பதிலும் சில பேருக்கு விருது கொடுக்கலாம். இந்த உற்சவத்தில் நல்ல விஷயமென்னவென்றால், இது தேச விடுமுறையாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் ஓய்வு பெறலாம்.
தீபாவளியை சாக்கு வைத்து குடும்பத்திலும் உறவினர் மற்றும் நாடு முழுவதும் தன் இஷ்டப்படி சாப்பிடவும், சினிமா பார்க்கவும், மற்றவர்களின் காது செவிடாகும்படி மத்தாப்பு, வெடிகளைக் கொழுத்தி, தெருக்களையும் நடந்து செல்கிற பாதைகளை மறைத்து இன்னும் அசுத்தமாக்கி சுவாசிக்கின்றக் காற்றை மேலும் விஷக் காற்றாக்கி நகரம் தேசத்தின் சுகாதாரத்தை நாசம் செய்வதில் சலைப்பதில்லை.
ஆக மொத்தம் தீபாவளி இறைவனை வழிப் பட்டு நல்ல காலம் பிறக்க வேண்டுமென்று
கேட்பது பல பேரின் பிரார்த்தனையாக இருப்பினும் அதன் விடை தன் கையிலிருப்பதை மறந்து விட்டு ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு, தன் செய்கையினால் ஏற்படும் பிரச்சனைகளை மறந்து விடுகின்றனர்.
தீபாவளி வருடத்திற்கு ஒரு முறையில்லாமல், பலமுறை கொண்டாடப் பட்டால் குடும்பங்கள் திவாலாகப் போவதும், நாடு சத்தம், காற்று வகையில் அசுகாதார நிலைமையை உறுதிப் படுத்தும்.
இதையெல்லாம் அப்பாற்பட்டு, தீபாவளி மகிழ்ச்சி சந்தோஷம் அளிக்கும் பொது பண்டிகை.
இந்தியா நன்மை, நேர்மை, நியாயம், சம உரிமை, ஜாதி ஒழிவு, ஊழல் போன்ற எல்லா வகையிலும் சுத்தம் அடையும் பாக்கியத்தைக் கூடிய சீக்கிரம் பெற்று தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடும் காட்சி பொருத்தமாகயிருக்கும்.
மீண்டும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
நன்றி.
வணக்கம்
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
எழுத்தாளர் தொகுப்பாளர்
பத்மினிஅர்ஹந்த்.காம்
ப்ரக்ரித்தி.பத்மினிஅர்ஹந்த்.காம்
Leave a Reply
Your email is safe with us.