தமிழ் நாட்டின் கீழடி ஆராய்ச்சி தொடக்கம்
பத்மினி அர்ஹந்த்
தமிழ் நாடு, அகில இந்தியா மற்றும் உலகம் அறிய வேண்டிய மனித குலம் பண்பாடு, நாகரீகம், தொழில் நுட்பங்கள் என்ற பல உன்னதமான மிகவும் அவசியமான தமிழ் மண்ணின் உண்மைகள், கடந்த நான்கு ஐந்து வருட காலம் மதுரையின் அருகில் உள்ள கீழடி ஆராய்ச்சியில் கண்டறிந்த ஏராளமான –
தமிழ் வரலாறு, இலக்கியம், சரித்திரம், பூகோளம், கணிதம், வணிகம்…என்ற பொக்கிஷம் ஏன் மறைக்கப் பட்டது?
கீழடியை ஏன் மீண்டும் புதைக்கப் பட்டது?
கீழடி ஆராய்ச்சியை ஏன் தொடங்க விடவில்லை?
யார் இந்த உத்தரவுக்கு பின்னணி?
தமிழ் நாட்டின் ஆளும் கட்சியும், மற்றபடி இந்திய தலை நகரத்தின் மத்திய அரசு இதற்க்கெல்லாம் பதில் அளிக்கும் படி தமிழர்களும், அகில இந்தியாவும் கோரிக்கை வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.
கீழடி ஆராய்ச்சி நிறுத்த பட்ட உத்தரவு எங்கிருந்து யாரிடமிருந்து வழங்கப் பட்டது என்ற சகல தகவலும் தமிழ் மக்கள் மற்றும் இந்தியா முழுதும் அறிய வேண்டிய மகத்தான விஷயம்.
எப்படி ஜல்லிக் கட்டு தமிழ் நாட்டை விட்டு அகற்ற முயற்சி தோல்வி அடைந்ததோ, அதே போல் கீழடியின் எழுச்சி மீண்டும் தமிழ் மண்ணிலிருந்து வர தமிழர்களும், இந்தியாவும் செயல் படுவது தற் சமய நிலவரதிற்கு தேவை.
இதில் மேலும் தாமதம், தமிழ் நாடும் அகில இந்தியாவிற்கும் எதிராக நடத்தும் சதியாகும்.
மக்கள் கோரிக்கையை எந்த அரசும் – அது மாநிலமோ அல்லது மத்திய அரசு நிராகரிப்பது, ஜன நாயக சுதந்திர கோட்ப்பாட்டின் எதிர்மறையாகும்.
இது தமிழ் நாடு மற்றும் இந்திய ஜன நாயகத்தின் தேர்வு. இதை அரசியல் உணர வேண்டும்.
அனுசக்திக்காக பூமியை பிளக்கும் இந்திய மற்றும் உலக அரசியல் முக்கியமாக அமெரிக்கா ஐரோப்பா கூட்டணி, கீழடி வரலாறான மனித குல பண்பாட்டின் தகவலை ஏன் சிதைக்க வேண்டும்?
ஆகிய கேள்விகளை முன் வை.
தமிழர்கள் ஆரியர்களோ அல்லது திராவிடர்கள் அல்ல என்ற குட்டு வெளியாவதையொற்றி தமிழ் நாடு ஒட்டு மொத்த திராவிட அரசியலுக்கும் மத்திய அரசு ஆரிய குழுவிற்கும் பீதியா?
தமிழர்கள் கொச்சை தமிழர்கள் அல்ல மற்றபடி சுத்த பச்சைத் தமிழர்கள்.
நாகரீகத்தை பண்பாடாக உலகிற்கு காண்பித்த முதல் மனிதர்கள் என்ற விவரங்கள் கீழடி ஆராய்ச்சி மூலம் கிடைத்ததை ஏன் வெளி உலகத்திற்கு அழுத்தமாக அறிய அனுமதிக்கப் படவில்லை?
உண்மை வெளி வர வேண்டும்.
கீழடையை மறுபடியும் தோண்டு என்ற சத்தம் அதிர வேண்டும். அப்பொழுது தான் நீ உன் அருமை, பெருமையை அறிவாய்.
பத்மினி அர்ஹ்ந்த்
———————————————————————-
திராவிடத்தின் தர்ம சங்கடம்
பத்மினி அர்ஹந்த்
ஒரு பக்கம், திராவிடக் கட்சிகள் தமிழர்கள் திராவிடர்கள் தான் என்ற பொய்யை மெய்யாக்குவதில் தோல்வி அடைந்து, அதையொற்றி தமிழர்கள் மூடர், முட்டாள்கள் அல்ல என்பது நிரூபித்த பின்பும்,
மீண்டும் அதையே தொடருவது ஆகாயம் நீலவானம் அல்ல என்ற வேண்டா விவாதம் போலாகிறது.
மேற்கொண்டு, திராவிட கட்சிகள் மற்றும் பாஜகவும் தமிழ் நாட்டின் மக்கள் சொத்தை அபகரித்து, அதை தனதாக்கி பத்து தலைமுறைக்கும் மேல் நிலைக்கும் ஆடம்பர வாழ்க்கையை சேகரித்து உல்லாசமாக வசிப்பது மறு பக்கம்.
தமிழ் மக்களின் உழைப்பில் அரசுக்கு பொது நலத்திற்காக வரி மூலம் கொடுப்பதை, இவர்கள் அந்நிய ஐரோப்ப நாடுகளின் சுவிஸ் வங்கி ஆகியவைகளில் இவர்கள் பெயரில் கொள்ளைப் பணமாக இந்நாள் வரை சேமித்து வைத்திருக்கும் அநீதி சீறுவது,
தமிழ் நாட்டு மக்கள் திராவிடர்கள் அல்ல என்பதை இவர்கள் கொள்கை மற்றும் இவ்வாறு செயல்கள் மூலம் இவர்களே சாதிக்கிறார்கள்.
தமிழர்கள் தமிழரல்ல, திராவிடர்களே என்றால், திராவிட ஆட்சிகள் இந்திய சுதந்திரத்திலிருந்து இந்நாள் வரை ஆளும் திராவிடம் அது சூரியனோ, சந்திரனோ, ஒற்றை இலையோ அல்லது இரட்டை இலை எதுவாயிருந்தாலும்,
இவர்கள் கருத்துப் படி திராவிடர் என்ற தமிழர்கள் செழிப்பம் வளர்ச்சிக்காக அதை தமிழ் நாட்டில் அல்லவா முதலீடு செய்யவேண்டும்?
அதை செய்யாமல், திராவிடம் திராவிட குடும்பத்தினரே அதை வாழையடி வாழையாக அனுபவித்து வரும் கொடுமையை எப்படி சமாளிப்பார்கள்?
இதுவே போதுமே சான்றாக – திராவிடம் தமிழர்களை தன்னைப் போல் நினைப்பதில்லை. அது ஒரு பட்சத்தில் நல்லதாக இருந்தாலும்,
ஆட்சி புரிவதற்காக, தமிழர்களின் பூர்விகத்தையும் பரம்பரையையும் தலைகீழாக மாற்றுவதற்கு இவர்கள் யார்?
இவ்வகையில் தமிழர்கள் திராவிடர்கள் அல்ல என்பதை இவர்களே துல்லியமாக ஊகிக்கிறார்கள்.
இதற்க்கு பிறகு, தமிழர் திராவிடர் என்ற கட்டுக் கதை கானல் நீர் போல் மறைவது தான் உறுதி. ஏற்கனவே அது ஆகவில்லை என்றால் கூடிய சீக்கிரம் அந்நிலைமை நிச்சயம் என்பதில் மாறு கருத்தில்லை.
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.