சுயநல மோசடி அரசியல்
பத்மினி அர்ஹந்த்
தமிழ் நாடு மற்றும் இந்திய மத்திய மாநில அரசு சுயநல மோசடி அரசியல்.
நான் இந்நாள் வரை கூறியபடி இந்திய அரசியலும் மாநில அரசியலும் உலகத்தை குட்டி சுவராக மாற்றியுள்ள மறைமுகமாக செயல் படும் அறமற்ற குழுவின் அடிமையாக இருந்து கொண்டு, இந்தியாவை சுதந்திர தேசம் என்றதை இழக்க செய்து அடிமையாக வைத்திருப்பது தான் உண்மையான நிலை.
இந்தியாவின் மத்திய அரசு உலக மறைமுக குழுவின் கட்டுப்பாட்டில் இருப்பது ரகசியமில்லை. அதே போல், மத்திய அரசு RSS அமைப்பில் உருவாகி, மற்ற மாநில அரசுகளை தன் கைவசம் வைத்திருப்புதும் சிதம்பரம் ரகசியம் அல்ல.
இது ஒரு பிரமிட் (pyramid) அமைப்பு தான். ஒருவருக்கு மேல் ஒருவர் ஆதிக்கம் புரிந்து உச்சியில் இருப்பவர் மறைமுக குழு.
மத்தியில் அவர்கள் நியமித்த அரசாங்கம் அதனின் தலைவர்.
அவர் பங்கிற்கு அவர் தன் தேசத்தில் உள்ள எதிர் கட்சி, தனி கட்சி, கூட்டணி கட்சி என்று பல்வேறு அரசியல் கட்சிகளை ஊழல் மற்றும் மிரட்டல் போன்ற அரசியல் வழியில் தன் வசத்தில் வைத்துக் கொண்டு அந்நியர்களின் கோட்பாடு படி நாட்டை அந்நியர் ஆதிக்கத்தில் முழுமையாக ஒப்படைத்திருப்பது தான் ஒலி மறைவான நிலவரம்.
இதில் அந்த பிரமிட்டின் தரை மட்டத்தில் உள்ள பொது மக்கள் தான் இந்த மோசடியில் இரை.
ஏற்கனவே இத்தகைய செயல்கள் 2016’ல் Rs.500, Rs.1,000 பணமதிப்பு நீக்கம் அதற்க்கு பிறகு corona தொற்று நோய் பரவல், இப்படி இவர்கள் கூட்டணியில் பல தில்லு முல்லுகள், மக்களின் பலிக்கு காரணமாகும்.
இவர்கள் தனது அராஜகத்தை நீடிப்பதற்க்காக, தேர்தல் என்ற ஒரு போலி திருவிலாவை நடத்தி தன் நீதி நேர்மையற்ற அரசியலை வலிமை படுத்த எந்த விதத்திலும் எதையும் செய்வது இவர்களின் தற் காலிக கோரிக்கையாகும்.
என்னை அனாவசியமாக இவர்கள் பனை வைப்பது இவர்களின் மூடத் தனமாகும்.
நான் பொது தலத்தில் தெளிவாக இதையொற்றி விளக்கி உள்ளேன். இதே இந்திய அரசியலும் திரையுலகமும் மற்றும் ஊடகம் ஒன்று கூடி நான் பொது தலத்தில் தோன்றிய நாளிலிருந்து இந்நாள் வரை என்னை ஆகாமல் விஷத்தையும் விஷமத்தையும் விதைத்து அந்நியர்களை உற்சாக படுத்துவதற்காக என்னை எதிர்த்து எல்லா வகையிலும் செயல் பட்டு கொண்டிருக்கிறார்கள்.
அதே சமயம் என்னை வைத்து இவர்கள் எல்லோரும் தன்னுடைய உயிரற்ற அஸ்தமமான நிலமையை உயிர்பித்தவர்கள் ஆவர். இவர்கள் இந்நாள் வரை எனக்கு நன்றி கடன் செலுத்தும் வகை உண்டவர்க்கே உபத்திரம் செய்வது தான்.
நான் பொதுவாகவே அரசியலை விமர்சிப்பது ஒரே காரணத்திற்காகத்தான். இவர்கள் எல்லாம் வேற கட்சி, கொள்கைகள் என்று நாடகம் செய்து மக்களை ஏமாற்றும் ஒரே குறிக்கோள் உள்ளவர்கள் என்று பல முறை கூறியுள்ளேன். இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது.
மக்கள் உரிமை, நாட்டின் சுதந்திரம், பொருளாதாரம், இயற்க்கை வளங்கள் ஆகியவைகளை தொழில் அதிபர்கள் மற்றும் அந்நியர்களுக்கு பேரம் பேசி அவர்களின் அரசியல் செல்வாக்கை பெருக்கி, இவர்கள் தன் சார்பில் பல தலைமுறைக்கு கல்ல கறுப்பு பணம் சொத்து அதுவும் அந்நியர்களின் தேசத்தில் குவித்து சுய பொருளாதாரம் மற்றும் இவர்கள் அடிமையாக இருக்கும் அந்நியர்களின் ஆதிக்கம் பெருகுவதற்காக அரசியலில் ஈடு படுகிறார்கள்.
இதை மறுப்புவர்கள் நிச்சயமாக அரிச்சந்திரன் வம்சாவழி அல்ல என்பதை தான் பிரதிபலிக்கும்.
கடைசியாக இத்தலைப்பில் நான் அரசியலுக்கும் மற்றும் எவரும் என்னோடு வேண்டா விவாதத்தில் தன் தன்னலத்திற்க்காக செயல் படுவதில் மும்மரமாக இருப்பவர்களுக்கு எச்சரிப்பது என்னவென்றால்,
நான் ஒன்றும் எவரின் கித்தான் அதாவது ஓவியம் பூசும் கான்வாஸ் இல்லை. அவரவர் விருப்பம் படி என்னை சித்தரிப்பது அவரவரின் பிறவி அதிகாரம் என்ற தவறான மனப்பான்மை கொண்டு இவ்வாறு என்னோடு மோதுவது அநாகரீகத்தின் உச்சமாகும்.
நான் பல தடவை கூறியது இம்முறைச் செல்லும். இவர்களின் தீய வினைகள் இவர்ளை கண்டிப்பாக தண்டிக்கும்.
நான் எந்த அரசியலோ, அதிபரையோ, நபர்களையோ, சங்கம், அமைப்பு வகைறாக்களை ஆதரிப்பதில்லை. அதோடு எந்த வகையிலும் இணைப்பு கிடையாது.
அதை நன்றாக அறிந்து புரிந்த பிறகும், அரசியல், ஊடகம் மற்றும் திரையுலகம், பல விதத்தில் என்னை பற்றி பொய் பிரச்சாரம் செய்வது இவர்களின் சீரற்ற சருகுகின்ற நிகழ் காலத்தை ஊகிக்கிறது.
இப்படி என்னோடு முரண் படுவது இவர்களின் பிழைப்பானால், இவர்களின் கர்ம பாரம் தான் அதிகரிக்கும்.
அதோடு இவர்களின் இழிவு அழிவை மேற்கொள்ள வேண்டிய தருணமாகும்.
கூடிய சீக்கிரம் அரசியல் உலகத்தில் அகற்றப் பட்டு மக்களுக்கும் நாடுகளுக்கும் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெறுவது சாத்தியம்.
இப்படிக்கு.
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.