இல்லுமினாட்டி அடியார்கள்
பத்மினி அர்ஹந்த்
வணக்கம்!
யார் இந்த இல்லுமினாட்டி?
உலகத்தை தன் கையில் வைத்து எதிர் மறையாக நடத்திச் செல்லும் ஒரு குழு.
இந்தக் குழுவில் அரசியல், தொழில் அதிபர்கள் மற்றும் சினிமா, ஊடகம், பத்திரிக்கை என்று பல துறைகளிலிருந்து பிரபலமானவர்கள் உறுப்பினராவார்கள்.
இல்லுமினாட்டி உத்தேசம்?
உலகத்தையும் உலகத்தின் சாதாரண குடிமக்களையும் அடக்கி அவர்களின் சகல உரிமைகளையும் மறுத்து அவர்களை அடிமை நிலையில் வைத்து ஆட்சி புரியும் கொள்கையுள்ளவர்கள்.
இவர்களின் முக்கிய உறுப்பினர்கள் பெரும்பாலும் பதவி, புகழ், செல்வத்தின் அடிப்படையில் செயல் படுபவர்கள்.
இல்லுமினாட்டி குழுவினர் தவறு, குற்றம், கொலை, கொள்ளை, கறுப்பு பணம், வருமான வரி போன்ற பல அபராதங்களிலிருந்து இவர்களுக்கு பாதுகாப்பு உண்டு.
இல்லுமினாட்டி அடியார்களை எப்படி அடையாளம் காண்பது?
இல்லுமினாட்டி அடியார்கள் வதந்தி, பிரச்சாரம் மற்றும் போலி வேடம் போன்ற அனாவசிய செயல்களில் ஈடுபடுபவர்கள். இவர்கள் தன்னலம் சுயநலத்திற்க்காக யாரையும் எதையும் உபயோகப் படுத்துவதற்கு சலைப்பதில்லை. இவர்கள் தன்னுடைய தீயவைகளை யார் உண்மை நேர்மை நல்ல பண்பு ஆற்றல் உடையவரோ அவர் மீது சுமத்தி அவரின் நல்ல செயல்களை தனதாக்கிக் கொள்வதில் வல்லவர்கள்.
இவர்களின் முக்கியமான அறிகுறிகள் – பொய், பித்தலாட்டம், மிரட்டல், கள்ளம், கபடம், கல்மிஷம், பொறாமை, பேராசை, நயவஞ்சகம், துரோகம், வர்ணாஷ்ரம் பெயரில் ஏற்றத் தாழ்வு, தீண்டாமை, வேறுபாடு, போட்டாப் போட்டி, தீய செயல்களில் உடந்தை, அநீதி, போன்ற பல்வேறு வக்கிர புத்தி ஆகியவைகளாகும்.
இவர்களின் நோக்கம் – தனது அரசியல் சினிமா தொழில் போன்றவைகளில் செல்வாக்கை பெருகிக் கொள்வதற்காக எதையும் செய்பவர்கள். ஒரு அளவு, கட்டுப்பாடின்றி தரம் கெட்டு மதி இழந்து செயல்படுபவர்கள். இன்னொரு முக்கியமான இல்லுமினாட்டி மற்றும் இல்லுமினாட்டி அடியார்களின் செய்கை வந்து ரகசியம், மூடி மறைத்தல், அந்தரங்கம் போன்றவைகளாகும். அதே சமயத்தில் பிறரின் சுயவாழ்க்கையில் தலையிடுவது அதை இழிவு படுத்துவது இவர்களின் பொழுது போக்காகும்.
இல்லுமினாட்டி உத்தரவின் படி நடக்கும் இந்த அடியார்கள் பொது மக்களை ஏமாற்றவும் அவர்களை அறிவில்லாதவர்கள் போல் நடத்துவது இவர்களுக்கு சலுகையை அதிகரிக்கும் அதாவது இவர்களின் தீமைகளை மறைப்பதில் இல்லுமினாட்டி உதவி கிட்டும். அந்த தைரியத்தில் இவர்கள் எதையும் செய்யவும் அல்லது சொல்வதற்கும் தயங்குவதில்லை. உண்மையில் பார்க்கப் போனால் இவர்கள் இல்லுமினாட்டி அடிமைகள்.
அரசியலில், இவர்கள் மக்களை பேரம் பேசி அவர்களின் வாக்குகளை கறுப்பு பணம் கொடுத்து வாங்கின பிறகு அதே வாக்களித்தவர்களையும் சரி அல்லது வாக்கு தராதவர்களையும் காக்கை குருவிகளைப் போல் சுட்டுக் கொல்வதிலும் இவர்களுக்கு சிறிது கூட சங்கடமில்லை. இந்தச் சம்பவம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் காணப்பட்டது. இதில் வருந்தத் தக்கவை என்னவென்றால் இல்லுமினாட்டி அடியார் அரசியல் ஸ்னைபர்(Sniper) மூலம் கொலை செய்யப் பட்டவர்களை குற்றவாளியாக காண்பித்து, மறைந்திருந்து அரசியல் துப்பாக்கியால் தாக்கப்பட்ட அந்த இளம் வயது பள்ளி மாணவர் மாணவியை சமூக விரோதியென்ற பட்டதைக் கொடுத்து எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சி.
மற்றபடி 2009’ல் இந்தியாவின் மத்திய அரசும் தமிழ்நாடு மாநில அரசியல் கட்சிகள் கூட்டணி இலங்கை தமிழர்களின் படு கொலைக்கு காரணமாகும். அரசியல் தன் அதிகாரத்தை சர்வாதிகாரமாக பயன்படுத்துவது தனது அரசியல் உரிமையாகக் கருதி அநியாயம், அட்டூழியம், அராஜகம் இதை தவிர வேறு எந்த காரியம் செய்வதில்லை. இவையாவும் ஆதாரமாக இருக்கையில் அரசியல் வாதிகள் ஊழல் வாதிகள் மற்றுமில்லாமல் தீவிர வாதிகளாக செயல்படுகிறார்கள் என்பதை இவர்கள் வரலாறே தெளிவு படுத்துகிறதைத் தெரிந்தும் அதை மக்கள் மத்தியில் வைக்கும் பட்சத்தில் அவர்களின் தரம் கெட்ட குணத்தை இவர்கள் நடத்தும் ஊடகம், பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்துவது இவர்களின் விவஸ்த்தையாகி விட்டது.
அதே போல இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சதிக் கொலைக்குப் (Assassination) பின்னால் தமிழ் நாட்டின் திமுக கட்சி இணைந்திருந்த தகவல் உலகமே அறிந்த பிறகும், சோனியா காந்தி தலைமையிலுள்ள காங்கிரஸ் கட்சி திமுகாவுடன் கூட்டணி சேர்ந்திருப்பது அந்தந்த தலைவர் தலைவிகளின் குணாதிசைகளை காண்பிக்கிறது.
சினிமாவை பொறுத்தவரை பிரபலம் என்ற மகுடத்தைச் சூட்டி அவர்களை இல்லுமினாட்டி தன் எதிரியியை அகற்றுவதற்கு பதிலாளாக (PROXYயாக) உபயோகப் படுத்துவதுதான் நடைமுறையாக விளங்குகிறது. சினிமா நடிகர் நடிகைகளும் தனது விளம்பரம் புகழிற்காக இல்லுமினாட்டியின் கையாலாகயிருப்பதில் சிறிதும் தயக்கமில்லை.
இல்லுமினாட்டி கைவசத்தில் அரசியல், திரையுலகம், பொருளாதாரம் இருப்பின்னும் அது போறாமல் மதம் இறை வழிபாடு சம்பந்த பட்டவர்களையும் தனது கீழ் வைத்துக்கொண்டு மதம் சார்ந்த பிரச்சனைகளையும் தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இல்லுமினாட்டியும் அவர்களை சேர்ந்தவர்களும் பெண் குலத்தை எப்படிப் பார்க்கின்றார்கள்?
அவர்களைப் பொறுத்தவரையில் பெண் என்றாலே அவர்களுக்கு காமம், நிர்வாணம் மற்றும் பாலியல் தான் சரியென்று தோன்றுகிறது. இவர்களின் குறுகிய மனப்பான்மைக்கு உரம் போடுவது இவர்கள் தேர்ந்த பெண்கள் இவர்களின் விருப்பம்படி மேடையில் நின்று ஆண் பெண் குறியை குறித்து அவர்கள் கருத்தாக சொல்வது தற்ச்சமய கலாச்சாரமென்ற அநாச்சாரமாகியுள்ளது. பற்றாக்குறைக்கு தமிழ் திரையுலக முதிய நடிகர் காக்கா கூட்டம் அவரின் சார்பில் அச்சுறுத்தல் வகையில் பெண் என்றால் நிர்வாணம் என்ற வார்த்தையை உபயோகித்து மிரட்டலாமென்ற ஒரு கேவலமான கோரிக்கை வைத்துள்ளார்கள். இவர்களின் இத்தகைய இயல்புகள் இவர்கள் வீட்டின் பெண்களின் அந்தஸ்த்தைத்தான் தெளிவு படுத்துகிறது.
இந்த மாதிரி நடத்தைகள் ஆச்சரியத்தக்கதில்லை. ஏனெனில் பிறரின் கடுமையான உழைப்பு திறமையினால் ஏற்படும் நல்ல கர்மங்களை திருடிக்கொண்டு அதை தனதாக்கி தன்னையும் ஊரையும் உலகத்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டம் இத்தகைய ஈடுப்பாட்டில் தன்னையே தாழ்த்திக் கொள்வது தான் வெளிப்படுகிறது. தன் சுய அறிவை பயன்படுத்த முடியாதவர்கள் இப்படித்தான் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு தன் தலையில் மண்ணை வாரிக்கொள்வது இவர்களின் தனிப் பட்ட மனோ நிலமையை உரைக்கிறது.
நிர்வாணம் என்ற வார்த்தை ஒரு பெண்ணை அவமானப் படுத்தும் ஆயுதமாக கருதி சரளமாக உபயோகிக்கும் பேர்வழிகள் அவர்களின் மூர்க்கத்தைச் சுற்றிக் காண்பிப்பது அவர்களுக்கே தெரியவில்லை. இதுவே அவரவர் மந்த புத்தியை பிரதி பலிக்கிறது. மேலும் உலகத்தில் பிறக்கும் எல்லா உயிர்களும் பிறப்பின் பொழுது நிர்வாணமாக பிறப்பது இயற்க்கையின் செயல். அப்படி இருக்கையில் இவர்களும் இவர்கள் குடும்பத்தினர் உட்பட நிர்வாணமாகத்தான் பிறந்திருக்க முடியும். இல்லாவிட்டால் இவர்கள் கற்பனைப் படி ஆடை ஆபரணங்களோடு பிறந்திருக்க இயலாது.
இவர்களைப் போன்றவர்கள் அறிய வேண்டிய உண்மை என்னவென்றால் இவர்களின் எக்குத் தப்பான சிந்தனைகள், கிழ் தரமான கொள்கைகள் மற்றும் விபரீதமான செயல்கள் இவர்களின் ஆன்மாவை அதாவது ஆத்மா என்று கூறப்படும் தனித்துவம் அமைதியற்ற நிலையில் ஆவியாக உடல் உறுப்பின்றி நிர்வாணமாக அலையும் உறுதியான கதியைப் பற்றி இவர்கள் யோசிப்பது மிகவும் அவசியம்.
இதுதான் மனித பிறவியின் மிகப் பெரிய அவமானம் மற்றும் தன் கர்ம வினையினால் ஏற்படும் அளவு கடந்த தண்டனையாகும். இதைப்பற்றி நினைத்து தன் ஏறு மாறான பாதையை தவிர்த்து நல் வழியில் செல்வது தான் மனித பிறப்பிருக்கு உகந்தையாகும்.
மற்றபடி தமிழ் நாட்டை பொறுத்த வரையில் தமிழர்கள் இந்த நாள் வரை மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களாலேயே ஆட்சி புரிய பட்டுள்ளார்கள். ஒரு தமிழர் கூட மற்ற தென் மாநிலமோ அல்லது எந்த இந்திய மாநிலத்தின் முதல்வராக ஆட்சி புரியவில்லை.
இதை ஒரு பக்கத்தில் தமிழர்களின் பெருந்தன்மையாகக் கூறி சமாளிக்கலாம். ஆனால் மறு பக்கம் இதையே தமிழர்களின் பலவீனமாக கான்பிப்பதை மறுக்க முடியாது. அதே மாதிரி இந்நாள் வரை அரசியல் சினிமா இணைப்பு இந்திய அரசியலில் சதையும் எலும்பும் போலிருப்பது குடியரசின் அர்த்தத்தை மாற்றியுள்ளது. இதில் வேறு கருத்திருக்கலாம். ஆனால் இதன் விளைவு தமிழ் நாடு போன்ற மாநிலத்தைப் பாதித்ததைத் தவிர வேறு எதுவும் கொடுக்கவில்லை. மேற்கொண்டு மற்ற துறையிலுள்ள தமிழர்களுக்கு தமிழ் நாட்டின் அரசியலில் வாய்ப்பு பெறுவது குதிரைக் கொம்பாகத்தான் மாற்றப் பட்டுள்ளது.
இதையெல்லாம் உணர்ந்து தமிழர்கள் இனிமேலாவது மற்ற தொழில் துறையில் முக்கியமாக பொது சேவையில் பணியாற்றும் தகுதியுள்ள தமிழர்களை ஆட்சிக்கு கொண்டு வருவதில் தான் திருப்பம் மாற்றத்தைக் காணலாம். காவிச் சட்டையும் கருப்புச் சட்டையும் மற்றும் அவர்களுடன் கூட்டணியிலிருக்கும் அனைவரும் சுயநலவாதிகள் சந்தர்ப்ப வாதிகளென்பதை நன்றாகவே பதிவு செய்துள்ளார்கள். இதையொற்றி தமிழர்கள் கவனம் உணர்ச்சி தேவை.
நான் தமிழில் பேசுவதையும் எழுதுவதையும் தடுக்க பல முயற்சிகள் செய்யப் பட்டன. இதற்க்கு காரணம் இல்லுமினாட்டி தன் போலி நபர்களை எனக்கு பதிலாக நிறுத்துவதில் சிரமமாக கருதி இவ்வாறு அலுச்சாட்டியம் தன் அடியார்கள் வழியில் பண்ணிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
இறுதியில் நான் உறுதியாக கூறுவது – என்னை குறி வைப்பவர்கள் அறிய வேண்டிய முக்கியமான உண்மை. அவர்கள் யாரோட பிரதிநிதியாக யாருடன் மோதுகிறார்கள் என்பதை புரிந்து ஆலோசித்து அனாவசியமாக வேண்டா விவாதத்தில் தலையிடாமலிருப்பதில் தான் அவர்களுக்கும் அவர்களை ஏவி விடுபவர்களுக்கும் சிறந்ததாகும். ஏனென்றால் சாது மிரண்டால் காடு கொள்ளாது. அதோடு கடல் அலையோடு மோதுபவர்கள் எங்கு தள்ளப்படுவார்கள் என்பதை புத்திசாலிகள் அறிவார்கள். இது கடந்த காலத்திலும் சமீபத்திலும் இதில் பங்கு செய்தவர்கள் அனுபவத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
சிவன் எதையும் காப்பத்திற்க்காக அதற்க்குத் தடையாக விளங்கும் எதையும் எவரையும் தடுக்கவோ அல்லது தண்டிக்கவோ தாமதிப்பதில்லை. அரசன் அன்று கேட்டால் தெய்வம் நின்று கேட்க்குமென்பதில் யாருக்கும் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.
கடைசியில் மூடர்கள் முரடர்களுடன் உரையாடல் ஓட்டையுள்ள மண் பானையில் தண்ணீர் நிரப்பது போலாகும்.
மற்ற எல்லோருக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
நன்றி.
வணக்கம்.
இப்படிக்கு
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.